விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறல்.. திமுக கவுன்சிலர் மீது பாய்ந்த நடவடிக்கை!

DMK Councillor Suspended: சென்னை- டெல்லி இண்டிகோ விமானத்தில் பணிப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருவள்ளூர் 6- ஆவது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். இதில், கவுன்சிலர் பிரபாகரன் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறல்.. திமுக கவுன்சிலர் மீது பாய்ந்த நடவடிக்கை!

திமுக கவுன்சிலர் மீது பாய்ந்த நடவடிக்கை

Published: 

04 Mar 2026 11:21 AM

 IST

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, டெல்லி விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் திருவள்ளூர் 6- ஆவது வார்டு திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் தியாகு ஆகியோர் அந்த விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, விமானத்தில் பணியில் இருந்த பணிப்பெண்ணை அழைத்து உனது ஊர் எது என்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பெண் எனக்கு மதுரை என்று கூறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, அந்த பெண்ணிடம் மதுரையில் கல்லுப்பட்டியா, ஆண்டிபட்டியா எனக்கூறி கேலி செய்ததாக தெரிகிறது. மேலும், அந்த பெண்ணிடம் ஒருமையில் அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பணிப்பெண் தனது நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் சென்னை விமான நிலைய மகளிர் காவல் துறையிடம் புகார் அளித்தார்.

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட திமுக கவுன்சிலர்

அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் தியாகு ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், டெல்லிக்கு சுற்றுலா சென்றிருந்த பிரபாகரன் மற்றும் தியாகு ஆகியோர் சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு… செம குஷியில் கட்சியினர்… எம்.பி. ஆகிறாரா எல்.கே.சுதீஷ்?

திமுக கவுன்சிலர் மீது பாய்ந்த நடவடிக்கை

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், திருவள்ளூர் 6- ஆவது வார்டு திமுக கவுன்சிலர் பிரபாகரனை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். பிரபாகரன் மற்றும் அவரது நண்பரும், வழக்கறிஞருமான தியாகு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்த போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, பணியில் இருந்த பணிப் பெண்ணிடம் பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக, அந்த பணிப்பெண் டெல்லியில் விமானம் தரையிறங்கியதுடன், தனது நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார்.

விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த கவுன்சிலர்

இதே போல, மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். அதன் பேரில், அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். மேலும், விரிவான விசாரணைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஜராகுமாறு கூறியிருந்தனர். ஆனால், பிரபாகரன் மற்றும் தியாகு ஆகியோர் ஆஜராகாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பியதை அறிந்த போலீசார் அவர்களை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்திருந்தனர்.

மேலும் படிக்க: தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்.. தீவிர கட்டுப்பாடுகள்!

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ