மாணவர்களே ரெடியா? தவெக கல்வி விருது விழா.. தங்க நாணயம், ஊக்கத்தொகை வழங்கும் விஜய்!

TVK Education Award Function : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது விழா 2025 மே 30ஆம் தேதியான இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதற்கட்டமாக 88 தொகுதிகளில் உள்ள 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசுகளை வழங்க உள்ளார்.

மாணவர்களே ரெடியா? தவெக கல்வி விருது விழா..  தங்க நாணயம், ஊக்கத்தொகை வழங்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகம் விஜய்

Updated On: 

30 May 2025 08:02 AM

சென்னை, மே 30 : தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  தமிழக வெற்றிக் கழகம் (tamizhaga vettri kazhagam) சார்பில் 2025 மே 30ஆம் தேதியான இன்று விருது (TVK Education award function) வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னை மாமல்லபுரத்தில் உள்ள  ஹோட்டலில்  காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில்  88 தொகுதிகளில் உள்ள மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே, 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார். 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழக சார்பில் கல்வி விருது விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டிற்காக கல்வி விருது விழா 2025 மே 30ஆம் தேதியான இன்று நடைபெற உள்ளது.

தவெக சார்பில் மாணவர்களுக்கு விருது விழா

இதன் மூலம், 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்து பரிசுகளை வழங்க உள்ளார். அதோடு சில நிமிடங்கள் உரையாற்றவும் இருக்கிறார். இந்த விருது விழா 2025 மே 30ஆம் தேதியான இன்று சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில்,  முதற்கட்டமாக சென்னை, அரியலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகை, வேலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ளள 88 தொகுதிகளில் உள்ள 10,12ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோருடன் இந்த விருது விழாவில் கலந்து கொள்கின்றனர். 10, 12ஆம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களும் இந்த விருது விழாவில் கலந்து கொள்கின்றனர்.  இதற்கான ஏற்பாடுகளும் மாமல்லபுரம் ஹோட்டலில் செய்யப்பட்டுள்ளது.

தங்க நாணயம், ஊக்கத்தொகை வழங்கும் விஜய்


பரிசு பெற இருக்கும் 600 மாணவியர்களும் விஜய்யை நேரில் சந்திக்க உள்ளனர். தொகுதி வாரியாக மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தங்க நாணயம், ஊக்கத் தொகை வழங்கி கவுரவிக்க உள்ளார் விஜய். மேலும், விழாவில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு 21 வகையான மதிய உணவுகளும் வழங்கப்பட உள்ளன. மேலும், விழா நடைபெறும் இடம் பயங்கரமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு வருகை தரும் தமிழக வெற்றிக் கழக விஜய்க்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட உள்ளது. இதற்கிடையில், இந்த விழாவில் கட்சி விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை வைக்க வேண்டாம் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.