“மக்களாட்சி அல்ல.. பாசிச ஆட்சி” திமுகவை காட்டமாக விமர்சித்த விஜய்!

TVK Vijay : தமிழகத்தில் நடப்பது மக்களாட்சி அல்ல என்றும் பாசிச ஆட்சி தான் என்றும் தமிழக வெற்றிக் கழக தவைர் விஜய் விமர்சித்துள்ளார். வியாசர்பாடி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய தனது கட்சி நிர்வாகிகளை தடுத்தி நிறுத்தி தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்களாட்சி அல்ல.. பாசிச ஆட்சி திமுகவை காட்டமாக விமர்சித்த விஜய்!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

Updated On: 

27 May 2025 14:15 PM

சென்னை, மே 27 : தமிழக வெற்றிக் கழக (tamizhaga vetri kazhagam) தலைவர் விஜய்  (tvk vijay) கடுமையாக திமுகவை விமர்சித்துள்ளார். தமிழகத்தில் நடப்பது மக்களாட்சி அல்ல என்றும் பாசிச ஆட்சி தான் என்றும் விஜய் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியில் (vyasarpadi fire accident) உள்ள சத்தியமூர்த்தி நகர் அருகே உதயசூரியன் நகரில் 2025 மே 26ஆம் தேதியான நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட குடிசை வீடுக்ள ஏரிந்து சேதம் அடைந்தன. இந்த விபத்தில் யாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஒரு வீட்டில் இருந்து கேஸ் சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் மக்களின் உடமைகள், ஆவணங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் வீடுகளை இழந்தவர்கள் அனைவரும் தற்காலிகமாக ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தவெக தலைவர் விஜய் விமர்சனம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளையும், அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் உணவும் வழங்கியுள்ளனர்.  இந்த நிலையில், இதனை காவல்துறை தடுத்து நிறுத்தியதாக அக்கட்சி நிர்வாகிகள் குற்றச்சாட்டி உள்ளனர். மேலும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அக்கட்சியினர் குற்றச்சாட்டி உள்ளனர்.

இந்த  நிலையில், இதற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “தீ விபத்தில் பாதிக்கப்பட்டு, குடிசைகளை இழந்து, தங்களின் அத்தியாவசிய உடைமைகளை இழந்து, நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு உதவுவது என்பது காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய மாபெரும் குற்றச் செயலா?

“மக்களாட்சி அல்ல.. பாசிச ஆட்சி”

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதோ, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்து உதவுவதோ கூடாது என்று காவல் துறை சொல்கிறது என்றால், அவர்களின் உண்மையான நோக்கம் என்ன? தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே என்பதற்கு இதைவிட சாட்சி தேவையா என்ன?

மக்களுக்கான ஆட்சி நடத்துகிறோம் என்று வெற்று விளம்பரம் செய்யும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது அரசின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதே போன்று அராஜக நிலை தொடர்ந்தால், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மிகப் பெரிய மக்கள் போராட்டத்தையும் சட்டப்போராட்டத்தையும் முன்னெடுக்கத் தயங்க மாட்டோம் என்பதைத் தெரிவித்துகொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.