அடுத்த 2 நாட்கள்.. இந்த 9 மாவட்டங்கள் வெளுக்க போகுது கனமழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் இரண்டு தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தேனி, கோவை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் மிதமான மழை பெய்யக் கூடும்

அடுத்த 2 நாட்கள்..  இந்த 9 மாவட்டங்கள் வெளுக்க போகுது கனமழை..  லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

தமிழகத்தில் மழை

Updated On: 

10 Sep 2025 14:09 PM

 IST

சென்னை, செப்டம்பர் 10 : தமிழகத்தில் இரண்டு தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் (Tamil Nadu Weather Update) தெரிவித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.  அவ்வப்போது,   சென்னையிலும் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளில்  நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

அதன்படி,தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழையும், ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read : கனமழை வெளுக்கும்.. 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.. சென்னையில் எப்படி?

9 மாவட்டங்கள் வெளுக்க போகுது கனமழை


அதன்படி, 2025 செப்டம்பர் 10ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

2025 செப்டம்பர் 11ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : வெளுக்கப்போகுது… கனமழை லிஸ்டில் இந்த 7 மாவட்டங்கள்.. வானிலை மையம் கொடுத்த வெதர் அலெர்ட்!

சென்னையை பொறுத்தவரை, 2025 செப்டம்பர் 10,11ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதிக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.