12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு ? வானிலை சொல்லும் தகவல்..
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், வரும் நாட்களில் பல மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பநிலையின் தாக்கமும் கணிசமாக குறைந்துள்ளது. பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ், வெப்பநிலை பதிவானது.

வானிலை நிலவரம், செப்டம்பர் 7,2025: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், வட தமிழகத்தில் சில இடங்களிலும் தென் தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக விழுப்புரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 10 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வல்லம், மணலி ஆகிய பகுதிகளில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செப்டம்பர் 7, 2025 (இன்று) மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டப்போகும் கனமழை:
செப்டம்பர் 8, 2025 (நாளை) தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 9, 2025 அன்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10, 2025 அன்று வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை.. அதிமுக மாஜி எம்பி சத்தியபாமாவின் கட்சி பொறுப்பு பறிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், வரும் நாட்களில் பல மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பநிலையின் தாக்கமும் கணிசமாக குறைந்துள்ளது.
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னைப் பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் அவ்வப்போது சில இடங்களில் கன மழை பதிவாகி வருகிறது. இதனால் வெப்பநிலையின் தாக்கமும் கணிசமாக குறைந்துள்ளது.
மேலும் படிக்க: ஓபிஎஸ், டிடிவியுடன் சமரசம் பேச தயார் – நயினார் நாகேந்திரன்!
கடந்த 24 மணி நேரத்தில், பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ், வெப்பநிலை பதிவானது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 37.4 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 38.3 டிகிரி செல்சியஸ், மதுரையில் 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.