Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாறும் வானிலை.. மழை ஒரு பக்கம்.. அதிகரிக்கும் வெப்பநிலை மறுபக்கம்.. ரிப்போர்ட் இதோ..

Tamil Nadu Weather Update: தமிழநாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தாலும், ஒரு சில மாவட்டங்களில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் 9, 2025, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறும் வானிலை.. மழை ஒரு பக்கம்.. அதிகரிக்கும் வெப்பநிலை மறுபக்கம்.. ரிப்போர்ட் இதோ..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Sep 2025 06:45 AM IST

வானிலை நிலவரம், செப்டம்பர் 9, 2025: ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செப்டம்பர் 9, 2025, தேதியான இன்று கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 10, 2025, தேதியான நாளை வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. எத்தனை நாட்கள்? வெளியான அறிவிப்பு

வரும் நாட்களில் அதிகரிக்கும் வெப்பநிலை:

பின்னர், செப்டம்பர் 14, 2025, வரை சில இடங்களில் மிதமான மழை மட்டும் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மழை ஒரு பக்கம் இருந்தாலும் வெப்பநிலையின் தாக்கமும் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இலங்கை தமிழர்களுக்கு அதிர்ச்சி.. நீண்ட கால விசா பெற முடியாது… வெளியான தகவல்

100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகும் வெப்பநிலை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் 36.8 டிகிரி செல்சியஸ், மதுரையில் 36.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னை பொறுத்தவரையில், அதிகபட்சமாக 35.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல், கரூரில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்து பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.