AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மக்களே அலர்ட்.. கோடை வெயில் கொளுத்தி எடுக்கும்.. மழைக்கும் வாய்ப்பு?.. வானிலை அப்டேட் இதோ..

Weather Update: ஏப்ரல் 20ஆம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மக்களே அலர்ட்.. கோடை வெயில் கொளுத்தி எடுக்கும்.. மழைக்கும் வாய்ப்பு?.. வானிலை அப்டேட் இதோ..
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Apr 2026 06:34 AM IST

Tamilnadu Weather Today: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சுமார் 1.5 கிமீ உயரத்தில், வடகிழக்கு மத்தியப் பிரதேசம் முதல் மன்னார் வளைக்குடா வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “காங்கிரஸை பற்றி பேச வேண்டாம்”.. நாங்கள் பேச ஆரம்பித்தால் உங்களுக்கு சங்கடம்.. சீமானுக்கு எச்சரிக்கை!!

தமிழகத்தில் மழை நிலவரம்:

அந்தவகையில், வரும் ஏப்ரல் 22ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:

வரும் ஏப்ரல் 18ஆம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் படிப்படியாக உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 19,20ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், ஏப்ரல் 20ஆம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: “காங்கிரஸை பற்றி பேச வேண்டாம்”.. நாங்கள் பேச ஆரம்பித்தால் உங்களுக்கு சங்கடம்.. சீமானுக்கு எச்சரிக்கை!!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us