Tamil Nadu Election 2026 Live: நெருங்கும் தேர்தல்.. கமல்ஹாசன் இன்று பிரசாரம்!
Tamil Nadu Election 2026 Live: தமிழகத்தைப் பொறுத்தவரையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
LIVE NEWS & UPDATES
-
சிறப்பு பேருந்துகள் திட்டம்
வெளியூரில் வசிக்கும் நிலையில், அவர்கள் அனைவரும் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.இதற்காக சிறப்பு பேருந்துகள் திட்டமிடப்பட்டுள்ளன
-
கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும்
தேர்தல் அன்று அனைத்து அரசு துறை ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி தனியார் நிறுவனங்களும் அன்றைய தினம் கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் என கூறியுள்ளது.
-
Election Special bus: 10,633 சிறப்பு பேருந்துகள்
சட்டமன்ற தேர்தலுக்கு 10,633 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிடப்பட்டுள்ளது
-
இந்த முறை வண்ணப்புகைப்படம்
வேட்பாளர்களின் பெயர், வண்ணப் புகைப்படம் மற்றும் சின்னம் உள்ளடங்கிய வாக்குச்சீட்டுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.
-
தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்
சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் பொருத்தும் பணியை நேற்று தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்
-
இன்று 5 தொகுதிகளில் பிரசாரம்
ஏப்ரல் 17ம் தேதியான இன்று 5 தொகுதிகளிலும், 19ம் தேதி 2 தொகுதிகளையும் உள்ளடக்கி கமல்ஹாசன் பிரசாரம் செய்யவுள்ளார்
-
கமல்ஹாசன் இன்று பிரசாரம்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மற்றும் 19 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அத்தியாவசியப் பணி அலுவலர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்துவதற்கான தபால் வாக்குப்பதிவு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஏப்ரல் 17 முதல் 19 வரை நடைபெறுகிறது. மேலும் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
Published On - Apr 17,2026 7:14 AM