Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“நீங்கள் ரசிகர்கள் இல்ல.. வாரியர்ஸ்” காணொலியில் ஐடி விங் நிர்வாகிகளுக்கு விஜய் அட்வைஸ்!

tamilaga vettri kazhagam Vijay: சென்னையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனை கூட்டத்தில், திடீரென காணொலியில் விஜய் வந்து தொண்டர்களுக்கு சப்ரைஸ் கொடுத்துள்ளார். மேலும், ஐடி விங் நிர்வாகிகளை virtual warriors எனவும் அழைத்தார். அதோடு, அவர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.

“நீங்கள் ரசிகர்கள் இல்ல.. வாரியர்ஸ்” காணொலியில் ஐடி விங் நிர்வாகிகளுக்கு விஜய் அட்வைஸ்!
தவெக தலைவர் விஜய்Image Source: screengrab
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 19 Apr 2025 15:09 PM

சென்னை, ஏப்ரல் 19:  சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில்  தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) தொழில் நுட்ப பிரிவு (TVK IT Wing) நிர்வாகிகள் கூட்டம் 2025 ஏப்ரல் 19ஆம் தேதியான இன்று நடைபெற்றது. இந்ந கூட்டம் கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கட்சியை சேர்ந்த தொழில்நுட்ப பிரிவினர், சமூக ஊடக வலைதள பிரிவனர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த நிலையில், இந்த கூட்டத்தில் காணொலியில் மூலம் விஜய் (TVK Vijay) கலந்து கொண்டு உரையாற்றினார்.

”நீங்கள் ரசிகர்கள் மட்டுமல்ல..”

அப்போது ஐடி பிரிவு நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை வழங்கினார். அதாவது, “வணக்கம்.. மீட்டிங் நடக்கும்போதே உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இங்கு நெட்வோர்க் பிரச்னை இருப்பதால் என்னால் வீடியோ காலில் வர முடியவில்லை.

உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தமிழக வெற்றிக் கழகம் உள்ளது. இதை நாம் சொல்வதை விட மற்றவர்கள் அதை தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இனி ரசிகர்கள் மட்டுமல்ல..

நீங்கள் இந்த கட்சியின் virtual warriors. உங்களை virtual warriors  என்றே அழைக்க தோன்றுகிறது. நீங்கள் (த.வெ.க நிர்வாகிகள்) மரியாதையாக, கண்ணியமாக செயல்பட வேண்டும். விரைவில் நாம் அனைவரும் சந்திப்போம். உங்கள் அனைவருக்கு வாழ்த்துகள். வெற்றி நிச்சயம்” என்று கூறினார்.

காணொலியில் விஜய் உரை

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருக்கும் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழக எனும் கட்சியை தொடங்கினார்.  இந்த கட்சியை தொடங்கியதில் இருந்தே அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில் கூட,  செயற்குழு கூட்டம், இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை நடத்தி முடித்தார்.

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பதால், கட்சியை அனைத்து மட்டத்திலும் வலுப்படுத்த தீவிரமாக இறங்கியுள்ளார். 2025 ஏப்ரல் 26,27ஆம் தேதி கோவையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது.  ஐந்து கட்டங்களாக பல்வேறு இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மே அல்லது ஜூன் மாதத்தில் இருந்து  விஜய் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...