லாக் அப் மரணங்களை கண்டித்து த.வெ.க இன்று சென்னையில் போராட்டம்.. கலந்துக்கொள்வாரா விஜய்?
TVK Protest In Chennai: ஜூலை 13 2025 தேதி தேதியான இன்று தமிழக வெற்றி கழகம் தரப்பில் லாக்கப் மரணங்களை கண்டித்து நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் தலைவர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக காவல் துறை தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டுள்ளது.

த.வெ.க போராட்டம், ஜூலை 13, 2025: சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நகை திருட்டு வழக்கில் கோவில் காவலாளி அஜித் குமார் கைது செய்யப்பட்ட விசாரணையின் போது உயிர் இழந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையின் போது உயிர் இழந்த அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கேட்கும் வகையில் பல்வேறு கட்சிகள் தரப்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தேமுதிக தரப்பில் மற்றும் நாம் தமிழர் கட்சி தரப்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது லாக் அப் மரணங்களை கண்டிக்கும் வகையில், தமிழக வெற்றி கழகம் தரப்பில் சென்னையில் போராட்டம் நடத்த உள்ளனர். ஜூலை 13 2025 தேதியான இன்று சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் காலை 10 மணி அளவில் தமிழக வெற்றி கழகம் தரப்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
நிபந்தனைகளுடன் போராட்டம் நடத்த அனுமதி:
முன்னதாக தமிழக வெற்றி கழகம் நடத்தும் இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை என்பதன் காரணமாக இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீதிபதி போராட்டத்தை தள்ளி வைக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர் நேற்று அதாவது ஜூலை 12 2025 தேதியான நேற்று காவல்துறை தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதித்து இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.




Also Read: தவெக போராட்டம்.. போலீஸ் போட்ட 16 நிபந்தனைகள்.. நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!
அதாவது போராட்டம் நடைபெறும் இடம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அருகில் என்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல்லது சிகிச்சைக்காக வரக்கூடிய நோயாளிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்கக் கூடாது என காவல்துறை தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் பட்டாசு வெடிக்க கூடாது, இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக செல்லக்கூடாது, விஜய் போராட்ட களத்திற்கு வரும்போது அல்லது வீட்டிற்கு திரும்பும் போது எந்த ஒரு விரும்பத்தகாத செயலிலும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் ஈடுபடக்கூடாது என பல்வேறு நிபந்தனைகள் காவல்துறை தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
நிர்வாகிகளுக்கு அறிவுரை:
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு pic.twitter.com/UIbVWSYlId
— தமிழக வெற்றிக் கழகம் IT WING (@Tvk_ITWING_) July 12, 2025
சென்னை சேப்பாக்கம் அருகே நடைபெறும் இந்த போராட்டத்தை ஒட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளார். அதன்படி இந்த போராட்டத்தை கட்டுக்கோப்பாக அமைதியான முறையில் நடத்தவும், சாதி மதம் இனம் மற்றும் தனிப்பட்ட நபர்களை புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் இருக்கக்கூடாது. ஆர்ப்பாட்டத்தின்போது உருவ பொம்மைகள் எரிக்கக்கூடாது. மக்களுக்கு இடையூறு உண்டாகும் வகையில் பேனர்கள் பதாகைகள் வைக்கக்கூடாது. ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
போராட்டத்தில் பங்கேற்கும் தலைவர் விஜய்?
ஜூலை 13 2025 தேதி தேதியான இன்று தமிழக வெற்றி கழகம் தரப்பில் லாக்கப் மரணங்களை கண்டித்து நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் தலைவர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டுகளில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்தவர்களின் 21 பேரின் குடும்பத்தினரை தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகம் அழைத்து தலைவர் விஜய் சந்தித்த பேசினார். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 25000 வழங்கியுள்ளார்.