Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வார விழா கொண்டாடப்படும்.. முதலமைச்சர் அறிவிப்பு!

CM MK Stalin Announced Tamil Week Celebration | ஏப்ரல் 29, 2025 அன்று பாரதிதாசன் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வார விழா கொண்டாப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வார விழா கொண்டாடப்படும்.. முதலமைச்சர் அறிவிப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Apr 2025 13:49 PM IST

சென்னை, ஏப்ரல் 22 : பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வார விழா கொண்டாப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தமிழ்நாடு சட்டப்பேரவையில் (Tamil Nadu Assembly) இன்று அறிவித்துள்ளார். ஏப்ரல் 29, 2025 அன்று பாரதிதாசன் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு 110 விதியின் கீழ் முதலமைச்சர் பவெளியிட்டுள்ள அறிவிப்பு என்ன, இந்த தமிழ் வார விழா என்றால் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (Tamil Nadu Budget 2025 – 26 ) தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் துறை ரீதியாக எழுப்படும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்றும் (ஏப்ரல் 22, 2025) வழக்கம் போல சட்டப்பேரவை தொடங்கியது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதில், பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழ் வார விழா

பாரதிதாசன் பிறந்த நாள் ஏப்ரல் 29 ஆம் தேதி கொண்டாப்படும் நிலையில், ஏப்ரல் 29, 2025 முதல் மே 5, 2025 வரை தமிழ் வார விழா கொண்டாப்படும் என அறிவித்துள்ளார். தமிழ் மொழியையும், பாவேந்தர் பாரதிதாசனின் பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது

இதேபோல தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம் எழுத்தாளர், கவிஞர் ஒருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற தமிழ் இலக்கிய படைப்பாளர்களின் படைப்புகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு அரங்கங்கள் நடத்தப்படும் என்றும் அவர் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளதார் என்பது குறிப்பிடத்தக்கது.