AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. அக்.11 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் – வானிலை ரிப்போர்ட்..

Rainfall Alert: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்டோபர் 5) மற்றும் நாளை (அக்டோபர் 6) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. அக்.11 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் – வானிலை ரிப்போர்ட்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Oct 2026 14:27 PM IST

அக்டோபர் 5, 2026: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு உள் கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் தமிழகம், தெற்கு உள் கர்நாடகா வழியாக நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

அக்டோபர் 5 மற்றும் 6: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலை காணப்படலாம். ஏனைய தமிழக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: கோவை விமான நிலையத்தில் சிக்கிய மர்ம ட்ரோன்.. முதல்வர் வருகை தந்த நேரத்தில் அதிர்ச்சி!!

அக்டோபர் 11ஆம் தேதி வரை தொடரும் மழை: 

அக்டோபர் 7 மற்றும் 8: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். காரைக்கால் பகுதியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக பகுதிகள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 9: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். காரைக்காலிலும் மழை பெய்யலாம்.

மேலும் படிக்க: குத்துவிளக்கேற்ற மெழுகுவர்த்தி தராததால் மோதல்.. மேடையிலேயே காங்கிரஸ் எம்பியுடன் தவெக MLA வாக்குவாதம்!!

அக்டோபர் 10: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழக பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 11: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பநிலை நிலவரம்:

அக்டோபர் 5 முதல் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. அக்டோபர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அக்டோபர் 7 முதல் 9ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்டோபர் 5) மற்றும் நாளை (அக்டோபர் 6) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us