அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும், மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்

Tamil Nadu Weather Update : தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்துக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன் படி தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும், மீனவர்களுக்கு எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்

மாதிரி புகைப்படம்

Published: 

26 Jan 2026 15:37 PM

 IST

சென்னை, ஜனவரி 24 : தமிழ்நாட்டில் கடந்த  சில நாட்களாக பரவலாக மழை (Rain) பெய்துவரும் நிலையில், அடுத்த 48 மணி நேரங்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி (Puducherry) பகுதிகளில் ஜனவரி 26, 2026 இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கிழக்கு திசை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அடுத்து 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் ஜனவரி 26, 2026 இன்று உள் மாவட்டங்களில் சில பகுதிகளிலும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஜனவரி 27 , 2026 அன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பழனி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச கொடியேற்றம்…விண்ணை முட்டிய அரோகரோ கோஷம்!

அதே நேரத்தில், இந்த மழை நீண்ட நாட்கள் நீடிக்காது என்றும், வருகிற ஜனவரி 28, 2026 முதல் ஜனவரி 31, 2026 வரை மாநிலம் முழுவதும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டாலும், பெரும்பாலான இடங்களில் மழை பதிவாகாது என கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மேலும், ஜனவரி 27, 2026 முதல் ஜனவரி 29, 2026 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட சுமார் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் அதிகமாக உணரப்படலாம். குறிப்பாக உள்மாவட்டங்களில் குளிர்ச்சியான வானிலை நிலவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றாலும், அவ்வப்போது தூறல் மழை ஏற்படலாம்.

இதையும் படிக்க : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு…தமிழகத்தில் 15 லட்சம் பேர் விண்ணப்பம்!

இதனிடையே, தென் தமிழ்நாடு கடற்கரை பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி சுற்றியுள்ள கடல் பகுதிகளில் மணிக்கு சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல்சார் பணிகளில் ஈடுபடுவோர் தொடர்ந்து வானிலை அறிவிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?