இந்தியாவில் சர்க்கரை நோய் இனி ஒரு தனிப்பட்ட உடல்நலப் பிரச்னை மட்டும் அல்ல. இது தற்போது நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் ஒரு பெரிய சுமையாக மாறியுள்ளது. சர்வதேச ஆய்வு ஒன்றின் படி, சர்க்கரை நோயால் ஏற்படும் பொருளாதார பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் அமெரிக்காவும் மூன்றாவது இடத்தில் சீனாவும் உள்ளது.