Tamil Nadu Rains: இன்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?
Rainfall Alert: இன்று (நவம்பர் 26) திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 26, 2026: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நவம்பர் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில், மன்னார் வளைகுடா முதல் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 26: 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இன்று (நவம்பர் 26) திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாதது ஏன்? முதல்வர் விஜய்யிடம் அறிக்கை கேட்ட ஆளுநர் அர்லேகர்..
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 27: 3 மாவட்டங்களில் கனமழை
நாளை (நவம்பர் 27) நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், கடலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 28, 29: தென் மாவட்டங்களில் தொடரும் மழை
நவம்பர் 28ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: “அடிங்கடா… என்னை அடிங்கடா!” – வைகோ மீதான விமர்சனங்களுக்கு ஆவேசமாக பதிலளித்த துரை வைகோ
நவம்பர் 29ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது
பொதுவாக இந்த வாரம் முழுவதும், குறிப்பாக நவம்பர் 29ஆம் தேதி வரை தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும், அடுத்த சில நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.