கொட்டப்போகுது.. 7 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்.. சென்னையில் வெளுக்குமா?

Tamil Nadu Weather : தமிழகத்தில் 2025 செப்டம்பர் 6ஆம் தேதியான இன்று தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பெறுத்தவரை, நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

கொட்டப்போகுது.. 7 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்.. சென்னையில் வெளுக்குமா?

தமிழகத்தில் மழை

Updated On: 

06 Sep 2025 06:32 AM

 IST

சென்னை, செப்டம்பர் 06 : தமிழகத்தில்  4  நாட்களுக்கு கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் (Tamil Nadu Weather) தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2025 செப்டம்பர் 06ஆம் தேதியான இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. ஆனால், பெரிய அளவில் மழை பொழிவு என்பது இல்லை. அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. நீலகிரி, தேனி, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கூட, மிதமான மழையே பெய்து வருகிறது. மேலும் சென்னையில் கடந்த வாரம் நல்ல மழை பெய்த நிலையில், இந்த வாரம்  வெயில் அடித்து வருகிறது. இப்படியாக வானிலை இருக்கும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 2025 செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 செப்டம்பர் 6ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 செப்டம்பர் 8ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read : வெளுக்கப்போகுது… கனமழை லிஸ்டில் இந்த 7 மாவட்டங்கள்.. வானிலை மையம் கொடுத்த வெதர் அலெர்ட்!

7 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்


2025 செப்டம்பர் 9ஆம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 செப்டம்பர் 10ஆம் தேதி கோவை, நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்குமா?

மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 2025 செப்டம்பர் 6ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை