AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீலகிரி டூ கோவை.. பிச்சு உதறபோகும் கனமழை.. சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். குறிப்பாக, 2025 ஆகஸ்ட் 27,28ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யக் கூடும்.

நீலகிரி டூ கோவை.. பிச்சு உதறபோகும் கனமழை.. சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்
தமிழகத்தில் மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Published: 26 Aug 2025 06:30 AM IST

சென்னை, ஆகஸ்ட் 26 : தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் (Tamil Nadu Weather) என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை (Chennai Weather Today) பொறுத்தவரை மிதமான மழையே பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், டெல்டா, வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கூட மூன்று தினங்களாக தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கியது. தற்போது, மாலை நேரங்களில் மட்டும் சாரல் மழை பெய்து வருகிறது. காலை நேரங்களில் மேகமூட்டமாகவும், மாலை நேரங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. இதனால், சற்று வெப்பம் தணிந்துள்ளது.  இந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்

அதன்படி, அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா, மேற்கு வங்களா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். மேலும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : இனி மழை இல்லை.. பொளக்கப்போகும் வெயில்.. அதிகரிக்கும் வெப்பநிலை..

நீலகிரி, கோவைக்கு கனமழை அலர்ட்

2025 ஆகஸ்ட் 27,28ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read : வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், சென்னையில் வறண்ட வானிலை நிலவும் எனவும் 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் எனவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us