சென்னையில் 12 செ.மீ மழை.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
Chennai Rain And Weather Update: சென்னையில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், இன்று அதிகாலை கனமழை பதிவானது. மேலும் தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 22, 2025: சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வருட வானிலை நிலவி வந்த நிலையில் 2025 ஆகஸ்ட் 22 தேதியான இன்று அதிகாலை சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் இடி மின்னலுடன் கனமழை பதிவானது. அந்த வகையில் அதிகபட்சமாக ஒக்கியம் துரைப்பாக்கம் 12, மண்டலம் 15 ஈஞ்சம்பாக்கம் (சென்னை), மண்டலம் 13 ராஜா அண்ணாமலைநகர் (சென்னை) தலா 11, மண்டலம் 13 அடையார் (சென்னை) 10, மண்டலம் 14 பள்ளிக்கரணை (சென்னை), மண்டலம் 15 கண்ணகி நகர் (சென்னை), மண்டலம் 14 மேடவாக்கம் (சென்னை) தலா 9, மண்டலம் 10 சைதாபேட்டை (சென்னை), மண்டலம் 15 நீலாங்கரை (சென்னை) தலா 7, செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி:
அதனைத் தொடர்ந்து தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி ஒரிசா மேற்கு வங்காள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் 22 2025 தேதியான இன்று தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மாணவர்களுக்கு இலவச லேப்டாப் எப்போது?.. வெளியான முக்கிய தகவல்!
அதேபோல் ஆகஸ்ட் 23 2025 தேதியான நாளை மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆகஸ்ட் 24 2025 முதல் ஆகஸ்ட் 28 2025 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவர்… நெல்லையில் பரபரப்பு… அதிர்ச்சி காரணம்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை என்பது 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்க கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை:
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்பது மதுரையில் பதிவாகியுள்ளது. மதுரையில் 39.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து பாளையங்கோட்டையில் 38.5 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூர் 37 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 38 டிகிரி செல்சியஸ், ஈரோடு 38 டிகிரி செல்சியஸ், கரூர் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.