கனமழை வெளுக்கப்போகுது.. லிஸ்டில் உள்ள 4 மாவட்டங்கள்.. வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே விட்டு விட்டு மழை பெய்த வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 27) 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.

கனமழை வெளுக்கப்போகுது.. லிஸ்டில் உள்ள 4 மாவட்டங்கள்.. வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் மழை

Updated On: 

27 Sep 2025 06:41 AM

 IST

சென்னை, செப்டம்பர் 27 : தமிழகத்தில் செப்டம்பர் 27ஆம் தேதியான இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. கோவை, நீலகிரி, தென்காசி, வட மாவட்டங்களில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. 2025 செப்டம்பர் 27ஆம் தேதியான இன்று நள்ளிரவில் கூட, கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், அடுத்த சிலதினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

அதன்படி, தமிழகத்தில் 2025 செப்டம்பர் 27ஆம் தேதியான இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read : கோவை டூ தென்காசி… 2 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் முக்கிய அலர்ட்

சென்னையில் வானிலை எப்படி?


தொடர்ந்து, 2025 செப்டம்பர் 30ஆம தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : சுட்டெரிக்கும் சூரியன்.. 100 டிகிரி கடந்து பதிவான வெயில்.. இனி இப்படி தான் இருக்குமா?

சென்னையை பொறுத்தவரை, 2025 செப்டம்பர் 27ஆம் தேதியான இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ரயிலை தவறவிட்டவர்கள் அதே டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா?
ரோகித்துக்கு வட பாவ் வழங்க முயன்ற ரசிகர் - வைரலாகும் வீடியோ
விராட் கோலியை போலவே இருக்கும் சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்திய கிரிக்கெட்டில் எழுந்த டோப்பிங் சர்ச்சை.. சிக்கிய ராஜன் குமார்..