நெல்லையில் பரபரப்பு.. இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்ஐ.. திக்திக் வீடியோ!
Tirunelveli Crime News : திருநெல்வேலியில் இருசக்கர வாகனம் மீது மோதியதால், தட்டிக் கேட்ட இளைஞரை காரில் எஸ்எஸ்ஐ இழுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, இது சம்பந்தமான வீடியோ வெளியானதை அடுத்து, எஸ்.எஸ்.ஐ காந்திராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

காரில் இளைஞரை இழுத்து சென்ற எஸ்எஸ்ஐ
திருநெல்வேலி, செப்டம்பர் 19 : திருநெல்வேலியில் இளைஞரை கார் பேனட்டில் இழுத்து சென்ற போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ காந்திராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பைக் மீது எஸ்ஐ ஒட்டி வந்த கார் மோதியதை அடுத்து, அந்த இளைஞர் நீதி கேட்டு அவரது கார் பேனட்டில் படுத்துள்ளார். அப்போது, எஸ்ஐ அவரை 200 மீட்டர் தூரத்துக்கு இழுத்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. திருநெல்வேலி டவுனில் 2025 செப்டம்பர் 17ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதியுள்ளது. இதில் அந்த இருசக்கர வாகனம் சேதம் அடைந்துள்ளது. இதனை அடுத்து, இருசக்கர வாகன ஓட்டுநர் தனது பைக் மீது மோதிய காரை வழிமறித்து நிறுத்தினார். அப்போது, காரை ஒட்டி வந்தது போக்குவரத்து காவல் பிரிவு எஸ்எஸ்ஐ காந்திராஜன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, பைக் ஓட்டுநருக்கும் , உதவி ஆய்வாளர் காந்திராஜனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் நீடித்த நிலையில், அங்கு பொதுமக்கள் கூடினர். அப்போது, பைக் ஓட்டுநர் முன்னால் சென்ற பேருந்து நின்றதால், நானும் நின்றேன் என்றும் நீங்கள் தான் என் பைக் மீது மோதி சேதப்படுத்தியதாக கூறினார். ஆனால், இதனை கண்டுகொள்ளதாக உதவி ஆய்வாளர் காரை எடுக்க முயன்றார். அப்போது, பைக் ஓட்டுநர் வழிமறித்து காரை எடுக்க விடாமல் தடுத்ததோடு, கார் பேனட் முன்பு ஏறி படுத்துக் கொண்டு காரை தடுத்து நிறுத்த முயன்றார்.
Also Read : மது குடிக்க பணம் தரார தாய்.. மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்த மகன்.. அதிர்ச்சி சம்பவம்!
இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்ஐ
A traffic wing SSI, allegedly drunk, rammed a youth’s bike in Tirunelveli. After a quarrel, he drove with the youth clinging to his car bonnet for a few hundred metres. pic.twitter.com/U5c9TYCpeH
— Thinakaran Rajamani (@thinak_) September 18, 2025
ஆனால், பேனட் மீது படுத்திருந்த பைக் ஓட்டுநருடன் எஸ்எஸ்ஐ காந்திராஜன் காரை ஓட்டினார். 200 மீட்டர் தூரம் வரை காரை அவர் ஓட்டிச் சென்றிருக்கிறார். அப்போது, கார் பேனட் மீது படுத்திருந்த நபர், காப்பாத்துங்க காப்பாத்துங்க என அலறியுள்ளார். இந்த சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில், நெல்லை மாநகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
Also Read : கத்தரிக்கோல் முனையில் சிறுமி மிரட்டல்… அரசு மருத்துவமனையில் பரபரப்பு!
இதனை அடுத்து, காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றி மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார் உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்ட அவர், காந்தி ராஜனை சஸ்பெண்ட் செய்தார். பைக்கை ஒட்டி வந்தவர் அசோக் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அவர் மதுபோதையில் இருந்ததால், புகார் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.