அதிகரிக்கும் ஹீட் ஸ்டிரோக் – அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் ஸ்பெஷல் வார்டுகள்

Heat wave Alert : தமிழ்நாட்டில் வருகிற மே 4, 2026 அன்று அக்னி நட்சத்திரம் துவங்கவுள்ளது. இந்த நிலையில் வெப்ப அலை காரணமாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதிகரிக்கும் ஹீட் ஸ்டிரோக் - அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் ஸ்பெஷல் வார்டுகள்

மாதிரி புகைப்படம்

Updated On: 

27 Apr 2026 16:16 PM

 IST

சென்னை, ஏப்ரல் 27 : தமிழ்நாட்டில் வெப்ப அலை காரணமாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மே 4 முதல் தமிழ்நாட்டில் அக்னி வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஹீட் ஸ்டிரோக்

இதற்காக மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 5 படுக்கைகளும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 10 படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெப்ப அலை அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெயில் தாக்கத்தால் ஏற்படும் ஹீட் ஸ்டிரோக் பாதிப்புக்ளுக்காக சிகிச்சை அளிக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : வெயிலின் தாக்கம்: பட்டாசு ஆலைகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்

இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு நோயாளிகள் வந்தால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு மருத்துமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையில் 5 படுக்கைகளும், மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளில் 10 படுக்கைகளும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து அனைத்து அரசு பொது மருத்துவமனைகள, மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஹீட் ஸ்ட்ரோக் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஹீட் ஸ்டிரோக் காரணமாக ஏற்படும் மரணங்களை தவிர்க்க சுகாதாரத்துறை அலுவலர்களு்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க பொதுக்கமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஐஸ்கிரீமில் கலப்படம்? உணவு பாதுகாப்புத்துறை கடும் எச்சரிக்கை – என்ன நடந்தது?

மேலும் வெப்ப மேலும், வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் ஓஆர்எஸ் (ORS) கரைசல் வழங்கப்பட்டு வருகின்றன.

Follow Us
Related Stories
மீண்டும் அரசு பேருந்து டிஜிட்டல் பலகையில் தவெக பெயர் – திருநெல்வேலியில் பரபரப்பு – என்ன நடந்தது? – திருநெல்வேலியில் பரபரப்பு – என்ன நடந்தது?
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. ஒரு பக்கம் கனமழை எச்சரிக்கை.. வானிலை சொல்வது என்ன?
மக்களே கோடை விழாவுக்கு தயாரா.. கண்களை கட்டி இழுக்கும் வண்ண மலர்கள்.. விரைவில் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி!
விஜய் வேட்பு மனுவுக்கு எதிரான வழக்கு… நீதிமன்றம் அளித்த குட் நியூஸ்!
விருதுநகர் கொடூர வெடி விபத்து சம்பவம்.. வனஜா பட்டாசு ஆலை உரிமையாளர் கைது.. தனிப்படை செய்த சம்பவம்!
மத்திய அரசுப் பணியிடங்களுக்கான பிரம்மாண்ட அறிவிப்பு… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?