தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? இவருக்கு அதிக வாய்ப்பு…எகிறும் எதிர்பார்ப்பு!

Tamil Nadu Next DGP Seema Agarwal: தமிழகத்தின் டிஜிபி அடுத்த மாதம் நியமனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டிஜிபி தேர்வு பட்டியலில் உள்ள மூவரில் பெண் அதிகாரியான சீமா அகர்வாலுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? இவருக்கு அதிக வாய்ப்பு...எகிறும் எதிர்பார்ப்பு!

தமிழக டிஜிபியாக நியமிக்க வாய்ப்பு

Updated On: 

25 Dec 2025 16:07 PM

 IST

தமிழக காவல்துறையின் படைத் தலைவர் மற்றும் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் இருந்து வந்தார். இவரது பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் 31- ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதன் பிறகு புதிய டி ஜி பியாக தீயணைப்பு துறை இயக்குநரான சீமா அகர்வால், ஆவின் விஜிலன்ஸ் முதன்மை அதிகாரி ராஜீவ் குமார், காவல் உயர் பயிற்சியக டி ஜி பி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், புதிய டி ஜி பி தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர், டி ஜி பி தேர்வுக்கான பெயர்கள் பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு கூறிய நபர்களை மத்திய அரசு ஏற்கவில்லை. இதேபோல மத்திய அரசு குறிப்பிட்ட நபர்களை தமிழக அரசு ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

பொறுப்பு டிஜிபி நியமனம்

இதனால், தமிழக டி ஜி பி நியமன விவகாரத்தில் இழுபறி ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இதனால், தமிழகத்துக்கு நிரந்தர டி ஜி பி நியமிக்கப்படாமல், பொறுப்பு டி ஜி பியாக காவல் துறையின் நிர்வாக பிரிவில் பணிபுரிந்து வரும் வெங்கட்ராமன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் இடையே பல்வேறு விமர்சனம் வந்தது. இதனிடையே, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி ஜி பியாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் அடுத்த மாதம் (ஜனவரி) டி ஜி பியாக பதவி உயர்வு பெற உள்ளார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. கோழிப் பண்ணைகளை கண்காணிக்க உத்தரவு..

தமிழக அரசு மீது குற்றச்சாட்டு

இவரை, டி ஜி பியாக தமிழக அரசு நியமிக்க இருப்பதாகவும், இதற்காகவே டி ஜி பி நியமனம் தாமதம் எனவும் குற்றச்சாற்று எழுந்தது. இந்த நிலையில், தமிழகத்துக்கு நிரந்தர டி ஜி பியாக ஒருவர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனவரி மாதம் டி ஜி பியாக பதவி உயர்வு பெற உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் டி ஜி பியாக நியமனம் செய்யப்பட்டால், தேர்தல் நேரத்தில் அவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

அடுத்த டிஜிபியாக சீமா அகர்வாலுக்கு வாய்ப்பு

எனவே, அவர் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பணியமர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்திப் ராய் ரத்தோர் ஆகிய மூவரில் ஒருவர் டிஜிபியாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், சீமா அகர்வாலுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: 100 நாள் வேலை திட்டத்தில் திமுக ஊழல் செய்ய முடியாது…நயினார் நாகேந்திரன்!

குப்பைத் தொட்டியில் கடந்த சீன துப்பாக்கி ஸ்கோப்.. விளையாட்டுப் பொருள் என விளையாடிய சிறுவன்!
‘ரஷ்ய இராணுவத்தில் சேர வற்புறுத்தப்பட்ட குஜராத் மாணவர்’ உக்ரைனில் இருந்து உதவிக்கோரி வீடியோ!
‘உங்கள் வாட்ஸ்அப் ‘ஹைஜாக்’ ஆகும் ஆபத்து’.. எச்சரிக்கும் சைபர் கிரைம்!
அடேங்கப்பா.. புர்ஜ் கலீஃபாவை மிஞ்ச தயாராகும் சவூதி அரேபியாவின் ஜெட்டா டவர்..