Tamil Nadu News Live: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள்!
Tamil Nadu Breaking News Today 6 August 2025, Live Updates: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்து பேசினர். 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.

LIVE NEWS & UPDATES
-
மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்!
உணவு டெலிவரி செய்யும் 2 ஆயிரம் ஊழியர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் கொலை.. அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் ஆறுதல்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்தினரை சந்தித்து அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார். இவரது தோட்டத்தில் நடந்த பிரச்னையை தீர்க்கச் சென்ற சண்முகவேல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கூட்டணி தலைவர்கள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் இன்று சந்தித்தனர். மேலும் படிக்க
-
கடன் தொல்லையால் மகள்களை கொன்று தந்தை தற்கொலை
கடன் தொல்லையால் தனது மூன்று மகள்களை கழுத்து அறுத்து தந்தை கொலை செய்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, அவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க
-
மின் கட்டணம் ரூ.91,993.. ஷாக்கான குடும்பத்தினர்!
சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு வீட்டில், ஜூலை மாத கணக்கீட்டில் மின் கட்டணம் ரூ.91,993 என வந்ததால் அக்குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மேலும் படிக்க
-
12 ஆம் வகுப்பு மாணவனை வெட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்!
திருநெல்வேலியில் தனது அக்காவுடன் பழகி வந்த 12 ஆம் வகுப்பு மாணவனை 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. பலமுறை கூறியும் 12ம் வகுப்பு மாணவர் கேட்கவில்லை என தாக்கியதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் 5 சிறுவர்களை சேரன்மகாதேவி போலீசார் கைது செய்தனர். மேலும் படிக்க
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!
கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பன் மீனவர்கள் 10 பேர், தொண்டியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
Tiruppur Crime : சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை.. முதலமைச்சர் இரங்கல்
திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சண்முகவேல் இறப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ரூபாய் ஒரு கோடி நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க
முதலமைச்சர் வெளியிட்ட பதிவு
திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியின் போது உயிரிழந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூபாய் ஒரு கோடி நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/J9HJJzmrQN
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 6, 2025
-
குழந்தையை தூக்கி போட்டு விளையாடியபோது நிகழ்ந்த விபரீதம்!
சென்னை சூளைமேட்டில் தனது 2 வயது ஆண் குழந்தையை சந்தோஷ் தூக்கி போட்டு விளையாடியபோது சீலிங் பேன் இடித்ததால் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைக்கு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
-
Tamil Nadu Rains : எந்தெந்த மாவட்டங்களில் மழை?
தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது
-
Tamil Nadu Weather : தமிழ்நாடு வானிலை நிலவரம்.. மழை அப்டேட்
வானிலை நிலவத்தை பொறுத்தவரை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது.
Breaking News in Tamil Today 6 August 2025, Live Updates: தமிழ்நாட்டில் வானிலை (Tamil Nadu Weather Today) மாறி வருகிறது. வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வானிலை மாற்றத்தை பொருத்தவரை, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை (Tamil Nadu Rains) பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீண்டும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேர், தொண்டியில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேரும் கைதாகி உள்ளனர். இது தொடர்பான அப்டேட்களை பார்க்கலாம். இது போக திருப்பூரில் போலீசார் வெட்டிக்கொலை (crime) செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்ற வருகிறது. மேற்கொண்டு தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கு பார்க்கலாம்
Published On - Aug 06,2025 10:44 AM