தமிழகத்தில் கடற்கரை திருமணமா… அதுவும் குறைந்த கட்டணத்திலா… அட ஆமாங்க.. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!

Tamil Nadu Beach Weddings: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தில் கடற்கரை திருமணங்களை நடத்தி கொள்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வகையான திருமணத்தை நடத்துவதற்கு குறைந்த அளவே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

தமிழகத்தில் கடற்கரை திருமணமா... அதுவும் குறைந்த கட்டணத்திலா... அட ஆமாங்க.. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!

கடற்கரை திருமணத்துக்கு தமிழக அரசு அனுமதி

Published: 

10 Mar 2026 07:54 AM

 IST

வெளிநாடுகளில் கடற்கரையில் திருமணம் நடைபெறுவதை நாம் சமூக வலைதளங்கள் வாயிலாக பார்த்திருப்போம். அவ்வளவு ஏன் இந்தியாவில் கூட கடற்கரையில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வகையான திருமணத்திற்கு கூடுதல் செலவு ஆகும் என்பதால் வசதி படைத்தவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோர் மட்டுமே இந்த வகையான திருமணத்தை கடற்கரையோரங்களில் நடத்தி வந்தனர். தற்போது, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களின் கடற்கரை திருமண கனவு மற்றும் ஆசையை நிறைவேற்றும் வகையில், அவர்கள் கடற்கரைகளில் தங்களது திருமணத்தை நடத்துவதற்கு தமிழக அரசு ஒரு முக்கிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் அதுவும் சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாமல்லபுரத்தில் கடற்கரை திருமணத்தை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திருமணத்தை நடத்துவதற்கு முன்பாக தமிழக சுற்றுலா துறையிடம் முறையான முன் அனுமதி பெற வேண்டும்.

கடற்கரை திருமணத்துக்கு கட்டணம் எவ்வளவு

முன் அனுமதி பெறும் போது, அதற்கான கட்டணம் ரூ.10 ஆயிரத்தை செலுத்த வேண்டும். அத்துடன், திருமண விழாவில் பங்கேற்கும் நபர்களுக்கு சைவ உணவு கட்டணமாக ரூ.700- இல் இருந்தும், அசைவ உணவுக்கு ரூ.1,100- இல் இருந்தும் உணவுகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதே போல, திருமண விழாவில் பங்கேற்க வரும் நபர்கள் தங்குவதற்கான விடுதிகளும், அதற்கான கட்டணமும் ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் நடைபெறும் திருமணத்துக்கு மேடை, அலங்காரம், மின்விளக்கு ஆகியவற்றை தனியார் அமைப்புகள் மூலம் தனியாக ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்.. உழைக்க நான் தயார்.. நீங்கள் தயாரா? முதல்வர் ஸ்டாலின்..

கடற்கரை திருமணத்துக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்

இதற்காக https://ttdconline.com என்ற தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து அதற்கான முன் அனுமதியை பெற்றுக் கொள்ளலாம். சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கடற்கரை திருமண திட்டம் எதிர்காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் நடத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சாதாரண குடும்பத்தை சேர்ந்த மக்களும் அதிக செலவின்றி குறைந்த செலவில் இயற்கையான கடலோர சூழல் அமைப்பில் திருமணத்தை நடத்த முடியும்.

இயற்கை சார்ந்த கடற்கரை திருமணம்

இந்தியாவில் பாதுகாப்பானதாகவும், ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், அழகியலோடு இயற்கை சார்ந்து இருக்கும் வகையில் கடற்கரை திருமணங்களை ஊக்குவிப்பதற்கு இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வசதி படைத்தவர்கள் மட்டிமின்றி பொருளாதாரத்தில் நடுத்தரத்தைச் சேர்ந்த பொது மக்களும் இந்த திட்டத்தில் பயனடைவார்கள். அத்துடன் தமிழகத்தில் கடற்கரை பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்.. கடலோர மாவட்டங்களுக்கு மழை அலர்ட்.. வானிலை அப்டேட் இதோ..

Follow Us
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு