பொங்கலுக்கு ரொக்க பணம் வழங்குவது உறுதி?கசிந்தது முக்கிய தகவல்!

Cash In 2026 Pongal Package: பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும்.

பொங்கலுக்கு ரொக்க பணம் வழங்குவது உறுதி?கசிந்தது முக்கிய தகவல்!

பொங்கலுக்கு ரொக்க பணம் உறுதி

Published: 

01 Jan 2026 13:52 PM

 IST

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ. 248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, இந்த பொங்கல் தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழு கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதில், ரொக்க பணம் வழங்குவது குறித்த அறிவிப்பு இல்லாததால், கடந்த 2025- ஆம் ஆண்டை போல, இந்த ஆண்டும் 2026 பொங்கல் தொகுப்புடன் ரொக்க பணம் வழங்கப்படாது என பரவலாக பேசப்பட்டது. ஆனால், இந்த சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரொக்க பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் கசிந்து உள்ளது.

நிதித்துறையுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

இது தொடர்பாக கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், கரும்பு ஆகியவற்றை வழங்குவதற்கு அதனை முன்கூட்டியே கொள்முதல் செய்ய வேண்டும். இதற்காகவே, ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பொங்கல் தொகுப்புடன் ரொக்க பணம் வழங்குவதற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் நிதி துறையுடன் கலந்து ஆலோசித்து உடனே அறிவித்து விடலாம்.

மேலும் படிக்க: பொங்கல் பரிசுத்தொகுப்பு.. ரூ. 248 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு..

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் வழங்குவது உறுதி

அதன் அடிப்படையில், உடனடியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்க பணத்தையும் வழங்கி விடலாம் என்று கூறினார். அதிகாரியின் இந்த தகவலின் அடிப்படையில், பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பணம் வழங்கப்படுவது உறுதியாகி உள்ளது. அதன்படி, ரூ.2 ஆயிரமா அல்லது ரூ.3 ஆயிரம் வழங்கலாமா, நிதி எவ்வளவு தேவைப்படுகிறது என்பது தொடர்பாக தமிழக அரசு கணக்கிட்டு வருகிறதாம்.

இன்று அல்லது நாளை அறிவிப்பு

இந்த ரொக்க பரிசு அறிவிப்பு தொடர்பாக இன்று வியாழக்கிழமை (ஜனவரி 1) அல்லது நாளை வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருப்பதாக அரசுத் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.  புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 அறிவிக்கப்பட்டது. இதேபோல, தமிழகத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

கடந்த 2022- ஆண்டு முதல்

கடந்த 2021- ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் 2022 முதல் 2024- ஆம் ஆண்டு வரை பொங்கல் தொகுப்புடன் ரொக்க பணம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரொக்க பணம் வழங்கப்படவில்லை. இதே போல,இந்த ஆண்டும் ரொக்க பணம் வழங்கப்படாது என்று பேசப்பட்ட நிலையில், ரொக்க பரிசு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பொது மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க: பொங்கல் பரிசுத் தொகுப்பு.. நாளைக்குள் டோக்கன்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்.. நியாய விலை கடைகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

வங்கி சேவைகள் முதல் சிம் கார்டு வரை... புத்தாண்டில் வரவிருக்கும் மாற்றங்கள்
புத்தாண்டை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. கட்டுப்பாடுகள் என்ன?
நாடு முழுவதும் அறிமுகமாகும் பாரத் டாக்ஸி.. இதன் சிறப்பம்சம் என்ன?
நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில்.. ஒருவர் பரிதாப பலி.. 2 ஏசி பெட்டிகள் தீயில் நாசம்!