தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு
Tamil Nadu Farmer Dies: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயதான விவசாயி ஜெயராமன், நிலப் பத்திரப் பிரச்சினையைத் தீர்க்க எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்று தீக்குளித்து உயிரிழந்தார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் இந்தக் கொடூரச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

தருமபுரி ஜூன் 10: தருமபுரி மாவட்ட எஸ்பி (Dharumapuri SP Office) அலுவலகத்தில் ஜெயராமன் என்ற 52 வயது விவசாயி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நில பத்திரம் தொடர்பாக புகார் அளிக்க சென்ற நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத விரக்தியில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. 60% தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் 2025 ஜூன் 10 அன்று உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரசின் செயல் மனப்பான்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதனைக் கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி
தருமபுரி மாவட்டம் கீழ் ராஜாதோப்பு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் (வயது 52) என்பவர் விவசாயியாகவும் கோழிப் பண்ணை நடத்துபவராகவும் இருந்தார். கடந்த 2025 ஜூன் 4ஆம் தேதி, தனது உறவினரிடம் கையளிக்கப்பட்ட நில பத்திரத்தை மீட்டுத் தர கோரி, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க சென்றார்.




அதே நேரத்தில் திடீரென அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை உடனடியாக காப்பாற்றி, தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு – அதிர்ச்சியில் பொதுமக்கள்
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த ஜெயராமன், அவரது உடலில் 60 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்ததால், ஜூன் 10ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அல்லது அதிகாரிகள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததாலேயே, விரக்தியில் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. விவசாயியின் தற்கொலை முயற்சி அரசு இயந்திரத்தின் செயல்திறனை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தருமபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த ஜெயராமன் எனும் விவசாயி தீக்குளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் ஆட்சியின் மீது மக்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.
மக்களின் எந்த புகாருக்கும் அரசு
செவி…— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 4, 2025
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “மக்கள் கோரிக்கையை அரசாங்கம் கவனிக்காததே இச்சம்பவத்துக்குக் காரணம். அரசு முற்றிலும் Mute Mode-இல் செயல்படுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவு இல்லாத ஸ்டாலின் ஆட்சியின் பயணத்தின் இது ஒரு துயரமான பதிவு” என எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்தார்.
மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 80 வயது மூதாட்டி பாலியல் தொல்லைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவத்தையும் குறிப்பிட்டு, “முதியவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், ஒரு முதல்வராக ஸ்டாலினை இது உறுத்தவில்லையா?” என்ற கேள்வியையும் எழுப்பினார்.