AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கொரோனாவிற்கு எதிராக மக்களிடையே அதிகரிக்கும் எதிர்ப்பு சக்தி.. செரோ சர்வேயில் வெளியான தகவல் என்ன?

Corona Sero Survey: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சமூக பரவலாக இருந்தாலும் மக்களிடையே எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை எடுத்த செரோ சர்வேயில் 97 விழுக்காடு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கு எதிராக மக்களிடையே அதிகரிக்கும் எதிர்ப்பு சக்தி.. செரோ சர்வேயில் வெளியான தகவல் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 11 Jun 2025 15:45 PM IST

கொரோனா பெருந்தொற்று 2020 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டிற்கு பிறகு சற்று குறைந்த கொரோனா பெருந் தொற்று மீண்டும் புதிய வகையாக உருமாறி மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கொரோனா பெருந்துற்றுக்கான நோய் எதிர்ப்பு சக்தி சமுதாயத்தில் எவ்வாறு உள்ளது என்பதனை கணிக்கும் வகையில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனரகம் தரப்பில் ஒரு செரோ சர்வே எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து கட்டங்களாக இந்த சர்வே பல்வேறு கால இடை வழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.

செரோ சர்வே:

முதல் கட்ட ஆய்வுகள் அக்டோபர் 2020இல் மேற்கொள்ளப்பட்டு 32 விழுக்காடு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட ஆய்வு ஏப்ரல் 2021ல் மேற்கொள்ளப்பட்டதில் சுமார் 29 விழுக்காடு மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி காணப்பட்டது. அதாவது முதல் கட்ட ஆய்வுகளில் இருந்து இது சற்று குறைவு என தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2021 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் டெல்டா வைரஸ் ஆக உருமாறி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அப்பொழுது கொரோனா தடுப்பூசியின் நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்ட நிலையில் பொது சுகாதாரத் துறை மேற்கொண்ட மூன்றாம் கட்ட ஆய்வில் சுமார் 70% மக்களுக்கு கொரோனா பெருந்தொற்றிற்கு எதிராக எதிர்ப்பு சக்தி இருப்பதாக கண்டறியப்பட்டது.

அதேபோல் டிசம்பர் 2021 மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட ஆய்வில் சுமார் 87 சதவீத மக்கள் கோவிட் பெருந்துற்றுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மூலமாக கொரோனா பெருந்துற்றினால் ஏற்படக்கூடிய மரணங்கள் பெருமளவு குறைக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டிலிருந்து கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த நிலையில் தற்பொழுது மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தற்பொழுது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 97 சதவீத மக்களுக்கு கொரோனா பெருந்தொற்று எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக காணப்பட்டாலும் நோயின் தீவிரத் தன்மை மிக குறைந்த அளவே இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Follow Us