Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அக்டோபர் 14ல் கூடும் தமிழக சட்டப்பேரவை.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

Tamil Nadu Assembly Session : தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் 2025 அக்டோபர் 14ஆம் தேதி தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 2025 அக்டோபர் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கக் கூடும் என அப்பாவு அறிவித்துள்ளார்.

அக்டோபர் 14ல் கூடும் தமிழக சட்டப்பேரவை.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 23 Sep 2025 12:28 PM IST

சென்னை, செப்டம்பர் 23 : தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் 2025 அக்டோபர் 14ஆம் தேதி தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 2025 அக்டோபர் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கக் கூடும். அக்டோபர் 14ஆம் தேதிக்கு முன்னதாக, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடும். அதில், தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்படும். நடப்பாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் 2025 ஜனவரி மாதம் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்யது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, 2025 மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதன்பின்பு, 2025 மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த இரு பட்ஜெட்டில் பல்வேறு  அறிவிப்புகள் வெளியாகின.  இதன்பின்பு, 2025 மார்ச் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து, 2025 மார்ச் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை துறை ரீதியிலான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.  பின்னர், சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.  இந்த நிலையில், 2025 அக்டோபர் 14ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Also Read : இனி ஒரே டிக்கெட் மூலம் பஸ், மெட்ரோ, புறநகர் ரயிலில் பயணம் செய்யலாம்.. அறிமுகமாகும் சென்னை ஒன் செயலி..

அக்டோபர் 14ம் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவை

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அப்பாவு, “தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 26(1)-ன் கீழ், அடுத்த கூட்டம் 2025 அக்டோபர் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தொடங்கும். அன்றைய தினம், ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு, இதுவரை மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேரின் இறப்பு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

Also Read : ’தமிழகத்தில் பாஜகவுக்கு No Entry தான்’ திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

2025-26ஆம் ஆண்டு கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கை சட்டப்பேரவையில் நிறைவேறப்பப்படும்” என்று கூறினார். மேலும், அக்டோபர் 14ஆம் தேதிக்கு முன்பாக நடக்கும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.   தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருப்பதால், இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.