வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டு வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, நிர்வாகிகள் தேர்தல் அலுவலர்களோடு களத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் அறிவுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின்
சென்னை, நவம்பர் 09: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.9) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், தேர்தல் ஆணையம் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து கட்சியின் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கும் வகையில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. SIR பணிகளின் போது, புதிய வாக்காளர்களை சேர்த்தல், தவறான பெயர்களை நீக்குதல், முகவரி திருத்தம் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக சீராக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒருபுறம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு புறம் அப்பணிகளில் என்னென்ன செய்ய வேண்டுமென நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதாக திமுக மீது விமர்சனங்கள் எழுந்தள்ளன.
இதையும் படிக்க : எத்தனை முதலமைச்சர்கள் வந்தாலும் அதிமுக – பாஜக கூட்டணியை பிரிக்க முடியாது – நயினார் நாகேந்திரன்
SIRக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு:
தமிழகத்தில் வருகிற 2026 ஆண் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் என்ற பெயரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளுக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது. இதனை, அதிமுக, பாமக, தவெக உள்ளிட்ட 20 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. தொடர்ந்து, அதில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல முடிவெடுக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வதற்கு ஆரம்பம் முதலே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.ஆனால், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை இந்திய தேர்தல் ஆணைம் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதனை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள், நவம்பர் 11, 2025 அன்று மாநிலம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன.
இதையும் படிக்க : ஜெயலலிதாவிடம் பொய் சொன்னார்… 2011-ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார்… ஓபிஎஸ் மீது வைகோ குற்றச்சாட்டு
ஸ்டாலின் தலைமையில் கூட்டம்:
இதனிடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணி அளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்டச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தொடர்பாக விவாதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.