தமிழகத்தில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
Final voter list: காஞ்சிபுரத்தில் ஆண்கள் 5,78,080, பெண்கள் 6,13,917, மூன்றாம் பாலினத்தவர் 197, மொத்தம் 11,92,194 வாக்காளர் உள்ளனர். விருதுநகர் வாக்காளர்கள் எண்ணிக்கை- 14,97,417. ஆண்கள்- 7,28,539, பெண்கள்- 7,68,62. தருமபுரியில் ஆண்கள் 6,24,647, பெண்கள் 6,15,311, மூன்றாம் பாலினத்தவர் 150 என மொத்தம் 12,40,108 வாக்காளர்கள் உள்ளனர்

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை, பிப்ரவரி 23: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் (Final Electoral Roll) சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) நடைபெற்ற நிலையில் இன்று (பிப்.23) தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நவம்பர் நான்காம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு பணிகள் நடைபெற்றது. இதில் இறந்த வாக்காளர்கள் நிரந்தரமாக இடம் மாறிய வாக்காளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. 40 நாட்கள் இந்த பணிகள் நடைபெற்ற நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி நிறைவடைந்தது அதன் தொடர்ச்சியாக 19ஆம் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 5.4 3 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிலிருந்து நீக்கப்பட்டு இருந்தது.
மேலும் படிக்க: வேலூர் தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டம் – கடைசி நேரத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு
97.37 லட்சம் வாக்களர்கள் நீக்கம்:
இந்த சிறப்புத் தீவிர திருத்தப் பணி தொடங்குவதற்கு முன்பு தமிழகத்தில் 6,41,14,587 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5,43,76,757 வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். அதாவது, சுமார் 97,37,831 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். இவர்களில், இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 27 லட்சம் ஆகும். நிரந்தரமாகக் குடிபெயர்ந்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்களின் எண்ணிக்கை 66,45,000 ஆகும். மற்றவர்கள் இரட்டைப் பதிவு உள்ளிட்ட காரணங்களால் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
34.75 லட்சம் பேர் விண்ணப்பம்:
நிரந்தரமாகக் குடிபெயர்ந்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் என்ற காரணங்களுக்காக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 66,45,000 பேரும், படிவம் 6-ஐ சமர்ப்பித்து மீண்டும் பதிவு செய்துகொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டதுடன், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. அந்தவகையில், பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக்கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர். மேலும் இணையதளம் வழியாக 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை சரி செய்யும் பணி கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது.
மேலும் படிக்க: விசில் அடிக்காவிட்டால் உதைப்பேன் – தவெக நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு
மாவட்ட வாரியாக வாக்காளர்கள் விவரம்:
அதன்படி, சுமார் 23 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் விபரங்கள்; காஞ்சிபுரத்தில் ஆண்கள் 5,78,080, பெண்கள் 6,13,917, மூன்றாம் பாலினத்தவர் 197, மொத்தம் 11,92,194 வாக்காளர் உள்ளனர். விருதுநகர் வாக்காளர்கள் எண்ணிக்கை- 14,97,417. ஆண்கள்- 7,28,539, பெண்கள்- 7,68,62. தருமபுரியில் ஆண்கள் 6,24,647, பெண்கள் 6,15,311, மூன்றாம் பாலினத்தவர் 150 என மொத்தம் 12,40,108 வாக்காளர்கள் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை – 5,56,321, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை -5,66,653, மூன்றாம் பாலினத்தோர் – 55, மொத்த வாக்காளர் – 11,23,029 ஆக உள்ளனர்.