தவெகவில் இணைவதை உறுதி செய்த செங்கோட்டையன்… விஜய்யுடன் சந்திப்பு

Sengottaiyan Meets TVK Vijay : தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின் போது தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பொறுப்பு கொடுப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

தவெகவில் இணைவதை உறுதி செய்த செங்கோட்டையன்... விஜய்யுடன் சந்திப்பு

விஜய் - செங்கோட்டையன்

Updated On: 

26 Nov 2025 19:35 PM

 IST

அதிமுகவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியைச் சேர்ந்த செங்கோட்டையனுக்கும் (Sengottaiyan) இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நீடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர், 2025ல் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் கலந்து கொண்டார். இது அதிமுகவினரிடையே மிகவும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் தவெகவில் (TVK) இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன.

விஜய்யை சந்தித்த செங்கோட்டையன்

தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின் போது தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பொறுப்பு கொடுப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான தனது நிலைப்பாடு, தேர்தலுக்கு அவர் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்த ஆலோசனைகளையும் செங்கோட்டையன் அவருக்கு வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : எத்தனை நாட்கள் தமிழை வைத்து ஏமாற்றுவார்கள்? தோல்வி அடைந்த ஆட்சி திமுக ஆட்சி – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்..

முன்னதாக தவெகவில் இணைவதன் ஒரு பகுதியாக, செங்கோட்டையன் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன் ஒரு பகுதியாக நவம்பர் 26, 2025 அன்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த அவர் தனது எம்எல்ஏ பதவிக்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.  இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தவெகவில் இணையப்போகிறீர்களா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு பதிலளித்த அவர், பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

தவெகவில் இணைவது உறுதி?

இந்த நிலையில் தான் தவெகவில் இணைவதை உறுதி செய்யும் விதமாக பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டில் அவரை சந்தித்தார். இதனையடுத்து நவம்பர் 27, 2025 அன்று அவர் தவெகவில் இணைவது உறுதியாகியுள்ளது. மேலும் அவருக்கு என்ன பதவிகள் கொடுக்கப்படும் என்பது குறித்து அவர் இணைந்த பிறகு விஜய் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. தவெக கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில், முதன்முறையாக மதிப்புமிக்க தலைவர் ஒருவர் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : 29 மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவு..

தமிழக அரசிய வரலாற்றில் ஒரே தொகுதியில் போட்டியிட்டு அதிகமுறை வென்றவர் என்ற பெருமையை செங்கோட்டையன் பெற்றிருந்தார். குறிப்பாக அவர் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இதுவரை 9 முறை போட்டியிட்டுள்ள அவர், 9 முறையும் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ராமர் கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?
ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் மேகி சமைத்த பெண்!
வங்கக்கடலில் உருவாகும் சென்யார் புயல்.. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை