நான் இல்லாவிட்டால் இபிஎஸ் முதல்வராகி இருக்க முடியாது.. செங்கோட்டையன் பளார்!!

உட்கட்சி மோதல் காரணமாக அதிமுக எனும் பெரும் பலம் கொண்ட கட்சி, மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கை இழந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேசமயம், இதுபோன்ற சம்பவங்கள் சட்டமன்ற தேர்தலில் புதிதாக உருவாகியுள்ள விஜய்யின் தவெக கட்சிக்கு பெரும் பலத்தை அளிக்கும் என்றும் கூறுகின்றனர்.

நான் இல்லாவிட்டால் இபிஎஸ் முதல்வராகி இருக்க முடியாது.. செங்கோட்டையன் பளார்!!

இபிஎஸ், செங்கோட்டையன்

Updated On: 

07 Nov 2025 14:17 PM

 IST

சென்னை, நவம்பர் 07: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் 14 பேரை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுவின் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அக்கட்சியினரை கவலை கொள்ள செய்துள்ளது. இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே நான் பேசி வருகிறேன் என்றும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்த்தால் தான் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: Karur Stampede: கரூர் நெரிசலுக்கு காரணம் திமுகவின் அலட்சியமா? தவெகவின் முதிர்ச்சியற்ற திறனா? விரிவான பார்வை!

தொடர்ந்து பேசிய அவர், 2009ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. பணம் செலவு செய்தால் போதும் என்று நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கு உழைத்தவர்களை மறந்துவிட்டு பணக்காரர்களுக்கு சீட் வழங்கியதாகவும், தன்னை முதல்வராக்கிய சசிகலாவை கொச்சையாக பேசியவர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். அதோடு, அதிமுகவை பாதுகாத்த பாஜகவை 2024 தேர்தலின்போது கழற்றி விட்டாதாகவும், பாஜகவுடன் 2026 தேர்தலிலும் அதற்கு பின்னரும் கூட்டணி இல்லை என்றும் கூறியிருந்தார். ஆனால், தற்போது 2026 தேர்தலுக்கு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

அதிமுக என்னவாகும்?:

தன்னைச் சுற்றியிருந்த யாரையும் அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கியதில்லை. ஆனால், இன்று என்னை சுற்றியுள்ளவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்றும் வேதனை தெரிவித்தார். என்னிடம் யார் பேசினாலும், கட்சியில் இருந்து அவர்கள் நீக்கப்படுவதாகவும், இப்படியே கட்சியில் இருந்து நிர்வாகிகளை நீக்கிக்கொண்டே இருந்தால் கட்சி என்னவாகும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவர் குரல் கொடுக்கிறார் என்றால் அதற்கு என்ன காரணம் என்பதை கேட்டறிய வேண்டும், அதை பொருட்படுத்தாது செயல்பட்டால் கட்சியின் நிலை என்னவாகும் என்றும் கவலை தெரிவித்தார்.

மேலும் படிக்க: தண்ணீர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து.. ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழந்த சோகம்..

சிபிஐ விசாரணை கேட்காதது ஏன்?:

எல்லாவற்றுக்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கும் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என ஏன் கேட்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்த்தால் தான் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்றும் கூறிய அவர், ஜெயலலிதா இருக்கும் போதும், அதன்பிறகும் மூன்று முறை ஓ.பன்னீர்செல்வம் அவர்களை மட்டும் தான் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமியை ஏன் அமர வைக்கவில்லை என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். ஏனெனில், இவரால் தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது என்று கூறியிருக்கிறார். நாங்கள் முன்மொழியாவிட்டால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆகி இருக்கவே முடியாது. பழைய விஷயங்களை கிளற ஆரம்பித்தால் நிறைய இருக்கின்றன. ஆனால் அவ்வாறு விமர்சிப்பவன் நான் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.