தூத்துக்குடியில் சுட்டு பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி.. போலீசாரை நாட்டு துப்பாக்கியால் சுட்டதால் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Rowdy Captured With Gun Shot In Tuticorin | தூத்துக்குடியில் ஆர்க் எனப்படும் மரிய அந்தோணி என்ற பிரபல ரவுடி பல நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில், அவரை போலீசார் மடக்கி பிடித்த நிலையில் அவர் நாட்டு துப்பாக்கியால் சுட முயன்ற நிலையில், துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

தூத்துக்குடியில் சுட்டு பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி.. போலீசாரை நாட்டு துப்பாக்கியால் சுட்டதால் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கைது செய்யப்பட்ட ரவுடி

Updated On: 

09 May 2026 15:56 PM

 IST

தூத்துக்குடி, மே 09 : தூத்துக்குடியில் (Tuticorin) ஆர்க் எனப்படும் பிரபல ரவுடி ஒருவரை மடக்கி பிடிக்க போலீசார் முயற்சி செய்த நிலையில், அவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி தப்பிக்க முயன்றார். இந்த நிலையில், அவரை போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த நிலையில், அவர் மீது மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், யார் இந்த ஆர்க், அவரை போலீசார் சுட்டு பிடித்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தூத்துக்குடியில் பிரபல ரவுடியை சுட்டு பிடித்து போலீஸ்

தூத்துக்குடி மாவட்டம், மினிசகாயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆர்க் எனப்படும் மரிய அந்தோணி. 35 வயதாகும் இவர் ஒரு பிரபல ரவுடி ஆவார். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இவர் மீது 29-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் தான் அவர் திருச்செந்தூர் அருகே சோனகன்விளை காணியாளன்புதூர் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தது குறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க : இன்னும் ‘இரண்டே’ சீட்.. 3 நாட்களாக ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கும் விஜய்!!

ரவுடியை மடக்கி பிடிக்கி விரைந்த தனிப்படை

போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் துணை காவல் ஆய்வாளர் ராஜபிரவு தலைமையிலான போலீசார், மே 07, 2026 அன்று மரிய அந்தோணியை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக அவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதுமட்டுமன்றி தன்னை தடுக்க முயன்ற துணை காவல் ஆய்வாளர் ராஜபிரபுவை நோக்கி தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதையும் படிங்க : “ரூட்டை மாற்றும் காங்கிரஸ்”.. விஜய்க்காக ராகுல் காந்தி எடுத்த அதிரடி முடிவு!!

மரிய அந்தோணி நடத்திய துப்பாக்கிச்சூ தாக்குதலில் துணை காவல் ஆய்வாளர் காயமடைந்த நிலையில், தற்காப்புக்காக காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் மரிய அந்தோணியின் வயிற்று பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இந்த காயமடைந்த அவரை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் அனைத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

7 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்த போலீசார்

இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி மரிய அந்தோணியின் மீது கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாசரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி