Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பக்தர்களே கவனிங்க… பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை ரத்து.. எப்போது தெரியுமா?

Palani Murugan Temple Rope Car Service : பழனி முருகன் கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காரணமாக 2025 செப்டம்பர் 19ஆம் தேதியான நாளை ரோப் கார் சேவை இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், பக்தர்கள் விஞ்ச் சேவை மற்றும் படிப்பாதை வழியாக மலைக் கோயிலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்தர்களே கவனிங்க… பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை ரத்து.. எப்போது தெரியுமா?
பழனி முருகன் கோயில்
Umabarkavi K
Umabarkavi K | Published: 18 Sep 2025 06:40 AM IST

பழனி, செப்டம்பர் 18 :  மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 2025 செப்டம்பர் 19ஆம் தேதி பழனி முருகன் கோயிலின் ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் பிரசித்தி பெற்றது. முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக தண்டாயுதபானி சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை, சஷ்டி, கிருத்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம் உள்ளிட்ட விஷேச தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி, முடியை காணிக்கையாகவும் செலுத்தி வருகின்றனர்.

Also Read : பிறந்தது புரட்டாசி மாதம்.. இந்த ஒரு மாதம் என்னென்ன செய்யக்கூடாது?

பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும், மின் இழுவை, ரோப் கார் சேவையையும் பயன்படுத்தி முருகனை தரிசித்து வருகின்றனர். இதில் பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள், பலரும் ரோப் கார் வழியாக மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைவான நேரத்தில் எளிதாக சென்றுவிடலாம் என்பதால் பக்தர்கள் ரோப் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை ரத்து

இந்த ரோப் கார் மூலம் பக்தர்கள் மலைக் கோயிலுக்கு மூன்று நிமிடங்களில் சென்று விடலாம். இந்த ரோப் காரில் மக்கள் பாதுகாப்பாக சென்று வர, அவ்வப்போது பராமரிப்புகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதற்காக மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

இதனால், பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  2025 செப்டம்பர் மாதத்திற்காக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதாவது, 2025 செப்டம்பர் 19ஆம் தேதியான நாளை பழனி முருகன் கோயிலில் ரோப் கார்  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Also Read : புதாதித்ய யோகம்.. இந்த 5 ராசிக்கு ஜெட் வேகத்தில் வாழ்க்கை மாறும்!

இதனால், அன்றைய  தினம் ரோப் கார் சேவை இயக்காது என  கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்து,  2025 செப்டம்பர் 20ஆம் முதல் வழக்கமாக ரோப் கார் சேவை இயக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. இதனால், பக்தர்கள் விஞ்ச் சேவை மற்றும் படிப்பாதை வழியாக மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.