Mysuru Dasara 2025: மைசூர் தசரா திருவிழா.. ஆன்லைனில் டிக்கெட் பெறுவது எப்படி?
Navratri Festival 2025: உலக புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா 2025, செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறுகிறது. கோல்டன் பாஸ் (ரூ.6,500), ஜம்பு சவாரி (ரூ.3,500), பஞ்சின காவ்யா (ரூ.1,500) டிக்கெட்டுகள் ஆன்லைனில் https://mysoredasara.gov.in/ மூலம் இணையதளம் மூலம் கிடைக்கின்றன.

பொதுவாக இந்தியா ஆன்மிக பூமி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இங்கு வருடம் 365 நாட்களும் ஏதேனும் ஒரு திருவிழா, எங்கேயோ ஒரு மூலையில் கொண்டாடப்பட்டு கொண்டே இருக்கும். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக பிற மத மக்களாலும் மாற்று மத விழாக்கள் விரும்பப்படும். அப்படியான விழாக்களில் ஒன்று தான் மைசூர் தசரா திருவிழா. நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியாக தசரா விழா கொண்டாடப்படும். இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டும் தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒன்று கர்நாடகா மாநிலம் மைசூரு, மற்றொன்று தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினம் ஆகும். இப்படியான நிலையில் மைசூரில் 2025 நவராத்திரி விழா செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான டிக்கெட்டுகள் மற்றும் கோல்டன் பாஸ் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் தசரா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு மைசூர் தசரா விழாவின் போது அரண்மனை, ஜம்புசாவரி, பஞ்சின கவிதை, பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றைக் காண விரும்புவோருக்கு ரூ.6,500 மதிப்புள்ள கோல்டன் பாஸ் டிக்கெட்டுகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறும் தசராவில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் கோல்டன் பாஸ் பெற்று நீங்கள் பார்க்கலாம். இது தொடர்பாக, தசரா சிறப்பு அலுவலரான மாவட்ட ஆட்சியர் லட்சுமிகாந்த் ரெட்டி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விரைவில் நவராத்திரி விழா.. கொலு பொம்மைகளை விற்க தொடங்கிய வியாபாரிகள்..!
எதற்கு எத்தனை டிக்கெட்டுகள்?
அதில் ஜம்புசாவரி மற்றும் பஞ்சினா அணிவகுப்பின் முக்கிய இடங்களைக் காண பொதுமக்கள் கோல்டன் பாஸ் வாங்க வசதியாக விற்பனை தொடங்கியுள்ளது. தசரா கோல்டன் பாஸின் விலை ரூ.6,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மைசூர் தசராவின் முக்கிய ஈர்ப்பாக இருக்கும் ஜம்புசாவரி டிக்கெட்டின் விலை ரூ.3,500 ஆகவும், பஞ்சினா திருவிழக்கு அணிவகுப்புக்கான டிக்கெட் ரூ. 1,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,
மேலும் ஆன்லைனிலும் இந்த டிக்கெட்டுகளைப் பெறலாம். மைசூர் தசரா அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://mysoredasara.gov.in/ மூலம் பொதுமக்கள் கோல்டன் பாஸ் மற்றும் இதர டிக்கெட்டுகளை வாங்கலாம். மேலும் டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் ஜி. லட்சுமிகாந்தரெட்டி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ரூ.6,500 விலையில் கோல்டன் பாஸ் வாங்கும் ஒருவர் சாமராஜேந்திர உயிரியல் பூங்கா, சாமுண்டி மலைகள் (சிறப்பு தரிசனத்திற்காக) மற்றும் மைசூர் அரண்மனை ஆகியவற்றிற்கு செல்ல ஒரு முறை இலவச அனுமதிவழங்கப்படும். மேலும் ட்ரோன் ஷோ, ஜம்புசாவரி மற்றும் பஞ்சின காவ்யா ஆகியவற்றைக் காண தனி இருக்கை ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Navratri 2025: தொடர் விடுமுறை.. நவராத்திரியை சிறப்பாக்க போக வேண்டிய அம்மன் கோயில்கள்!
ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?
- https://www.mysoredasara.gov.in என்ற வலைத்தளத்துக்கு செல்லவும்.
- அங்கு மேல்புறமாக பக்கத்தில் டிக்கெட்டுகள் மற்றும் நேரலை (Tickets and Live) என்ற ஆப்ஷன் முகப்புப் பக்கத்தில் தோன்றும்.
- அதைக் கிளிக் செய்த பிறகு, அது ஒரு தேர்வைக் கேட்கும். டிக்கெட் முன்பதிவு என்பதைக் கிளிக் செய்யவும்.
- பின்னர் டிக்கெட் முன்பதிவு பக்கம் திறக்கும்
- அதில் மைசூர் தசரா தங்க அட்டை, பஞ்சின கவாய் பன்னிமண்டபம் மற்றும் தசரா 2025 ஜம்போ சவாரி கட்டணங்கள் உள்ளிட்ட விருப்பங்களைக் காணலாம்.
- பின்னர், டிக்கெட்டுகளை வாங்க விரும்பினால் அதில் உள்ள ஆப்ஷனை கிளிக் செய்யவும் உங்கள் முழுமையான தகவலை உள்ளிட்டு, பணம் செலுத்தி உங்கள் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.