Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Astrology: புதாதித்ய யோகம்.. இந்த 5 ராசிக்கு ஜெட் வேகத்தில் வாழ்க்கை மாறும்!

2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 2 வரை புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த யோகம் ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு வருமானம், தொழில், குடும்பம் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சியைத் தரும் என கணிக்கப்பட்டுள்ளது.

Astrology: புதாதித்ய யோகம்.. இந்த 5 ராசிக்கு ஜெட் வேகத்தில் வாழ்க்கை மாறும்!
ஜோதிடப்பலன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 12 Sep 2025 21:16 PM IST

ஜோதிடத்தில் புதாதித்ய யோகம் மிகவும் முக்கியமானது. அதிகாரம் மற்றும் வருமான வளர்ச்சியுடன் தொடர்புடைய இந்த யோகம், சூரியனுக்கு உரிய சிம்மத்திலும், புதனுக்கு உரிய மிதுனத்திலும், மற்ற ராசிகளை விட இரட்டை பலன்களைத் தருகிறது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி, சூரியன் மற்றும் புதன் கிரகங்கள் ஒரே நேரத்தில் கன்னி ராசியில் நுழைகின்றன. கன்னி புதனின் வீடு மற்றும் லக்னம் என்பதாலும், சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய யோகம் சில ராசிகளுக்கு சிறந்த யோகத்தைத் தருகிறது. இந்த யோகம் 2025, அக்டோபர் 2 ஆம் தேதி வரை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு யோகத்தின் காரணமாக, ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய ராசிகள் வாழ்க்கை ஜெட் வேகத்தில் வளர்ச்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

மாற்றம் பெறும் ராசிகள்

  1. ரிஷபம்: இந்த ராசியின் ஐந்தாம் வீட்டில் சூரியனுடன் புதன் இணைவது தொழில் மற்றும் வேலைகளில் இந்த ராசியினரின் செல்வாக்கையும் முக்கியத்துவத்தையும் பெரிதும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வேலைகளில் உள்ள அதிகாரிகள் அவர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளால் பெரிதும் பயனடைவார்கள். பங்குகள் மற்றும் முதலீடுகல் மிகவும் லாபகரமாக இருக்கும். எந்தவொரு தனிப்பட்ட பிரச்சினையும் தீர்க்கப்படும். மற்றவர்களின் பிரச்சினைகளும் தீர்க்க ஆலோசனை கொடுப்பீர்கள். வருமானம் பெரிதும் அதிகரிக்கும். வருமானம் ஈட்டும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.
  2. மிதுனம்: இந்த ராசியின் நான்காவது வீட்டில் சூரியன் அதிபதியான புதனுடன் இணைவது புதாதித்ய யோகத்தை உருவாக்குகிறது. இது நிச்சயமாக வேலையில் உயர் பதவிகளுக்கு வழிவகுக்கும். குடும்ப வாழ்க்கையில் முக்கியமான சுப முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில், வேலை மற்றும் வணிகம் ஆகியவை லாபகரமானதாக இருக்கும். வருமானம் அதிவேகமாக அதிகரிக்கும். சொத்து தகராறுகள் தீர்க்கப்படும். தனிப்பட்ட மற்றும் நிதி சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். எல்லா இடங்களிலும் அங்கீகாரம் கிடைக்கும்.
  3. சிம்மம்: இந்த ராசிக்கு பண ஸ்தானத்தில் புதாதித்ய யோகம் உருவாகி வருவதால், வருமானம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். பங்குகள் மற்றும் முதலீடுகள் அபரிமிதமான லாபத்தைத் தரும். நிதி சிக்கல்கள் முழுமையாகத் தீர்க்கப்படும். எந்தவொரு நிதி முயற்சியும் நிச்சயமாக வெற்றி பெறும். வார்த்தைகள் மற்றும் செயல்களின் மதிப்பு அதிகரிக்கும். பெரும்பாலான குடும்பப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். அதிகாரிகள் தங்கள் தொழில் மற்றும் வேலைகளில் உங்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளால் பெரிதும் பயனடைவார்கள்.
  4. கன்னி: இந்த ராசியில், சூரியன் கிரகம் அதிபதியான புதனுடன் இணைவதால், அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. எந்தத் துறையாக இருந்தாலும், உங்களுக்கு நிச்சயமாக அதிகாரப் பதவி கிடைக்கும். போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் நீங்கள் பெரும் வெற்றியைப் பெறுவீர்கள். உங்கள் தொழில் மற்றும் வணிகம் புதிய உயரங்களை எட்டும். பிரபலங்களுடன் நெருங்கிய உறவுகள் உருவாகும். சொத்துக்கள் ஒன்று சேரும். சொத்து மதிப்பு அதிகரிக்கும். சொத்து தகராறுகள் தீர்க்கப்படும். தனிப்பட்ட மற்றும் குடும்பப் பிரச்சினைகள் கணிசமாகக் குறையும்.
  5. விருச்சிகம்: இந்த ராசிக்கு லாப வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகி இருப்பதால், தொழில் மற்றும் வேலைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது, அதே போல் நல்ல வருமானமும் கிடைக்கும். வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும். பங்குகள், முதலீடுகள் மிகவும் லாபகரமாக இருக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வணிகம் லாபகரமாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் எந்த வேலையும் வெற்றிகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடனான சொத்து தகராறுகள் சாதகமாக தீர்க்கப்படும்.
  6. தனுசு: இந்த ராசியின் பத்தாம் வீட்டில் சூரியனும் புதனும் இணைவதால், புதாதித்ய யோகத்துடன், தர்ம கர்மாதிப யோகமும் உருவாகிறது. இதன் காரணமாக, ஒரு நிறுவனத்தின் தலைவராகும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் நிர்வாகத்தில் ஒரு பகுதியாக இருப்பீர்கள். எந்தவொரு தனிப்பட்ட பிரச்சினைகளும் எளிதில் தீர்க்கப்படும். வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சொத்து தகராறுகள் சாதகமாக தீர்க்கப்படும் மற்றும் மதிப்புமிக்க சொத்துக்கள் கைக்கு வரும்.

(ஜோதிட சாஸ்திரம் மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)