பழனி கோயில் போறீங்களா? 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை ரத்து… வெளியான அறிவிப்பு
Palani Murugan Temple : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை 2025 ஜூலை 15ஆம் தேதி முதல் 31 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. இதனால், பக்தர்கள் விஞ்ச் சேவை, படிப்பாதை வழியாக மலைக் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோயில்
திண்டுக்கல், ஜூலை 11 : பழனி தண்டாயுதபாணி கோயிலில் (Palani Murugan Temple) 2025 ஜூலை 15ஆம் தேதி முதல் 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை (Palani Temple Rope Car Service) இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஒருமாதம் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக பழனி சோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான தண்டாயுதபானி சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிநாடுகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், கோடை விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும், சஷ்டி, கிருத்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம் உள்ளிட்ட விஷேச தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
31 நாட்களுக்கு ரோப் கார் சேவை ரத்து
இந்த கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. பழனி முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, மின் இழுவை, ரோப் கார் சேவை பயன்படுத்தி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும், ரோப் கார் சேவையை பயன்படுத்தி பக்தர்கள் தரிசனம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ரோப் கார் சேவையில மூன்று நிமிடங்களில் மலைக் கோயிலுக்கு சென்றுவிடலாம் என்பதால் பலரும் இதனையே பயன்படுத்தி வருகின்றனர்.
Also Read : இனி தமிழக கோயில்களில் பிரேக் தரிசனம்.. பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலையில் விரைவில் அமல்!
இதற்கிடையில், அவ்வப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் ரோப் கார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், அந்த குறிப்பிட்ட நாட்களில் ரோப் கார் சேவை இயங்காது. அதன்படி, மாதத்திற்கு ஒருமுறையும், வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது.
Also Read : கேரளா பத்மநாப சுவாமி கோயிலில் தரிசன நேரம் மாற்றம்
இந்த நிலையில், மாதாந்திர பாராமரிப்பு பணிகள் காரணமாக, 2025 ஜூலை 15ஆம் தேதி முதல் ரோப் கார் சேவை இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2025 ஜூலை 15ஆம் தேதி முதல் 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், பக்தர்கள் விஞ்ச் சேவை மற்றும் படிப்பாதை வழியாக மலைக்குகு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.