நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கார்கள்.. 5 பேர் பலியான நிலையில், 7 பேர் படுகாயம்!
Ramanathapuram Car Crash | ராமநாதபுரத்தில் நேற்று (டிசம்பர் 05, 2025) இரவு இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கடும் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்துலேயே பலியான நிலையில், படுகாயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாதிரி புகைப்படம்
ராமநாதபுரம், டிசம்பர் 06 : ராமநாதபுரத்தில் (Ramanathapuram) நேற்று (டிசம்பர் 05, 2025) இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையில், காரில் பயணம் செய்த மொத்த 12 பேரில் 5 பேர் பலியான நிலையில், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கார்கள் – 5 பேர் பரிதாப பலி
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பகுதி அருகே நேற்று (டிசம்பர் 05, 2025) இரவு இரண்டு கார்கள் சாலையில் சென்றுக்கொண்டு இருந்துள்ளன. இந்த இரண்டு கார்களிலும் மொத்தம் 12 பேர் பயணம் செய்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது கீழக்கரை அருகே சென்றபோது இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதி கடும் விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக பலியான நிலையில், மீதமுள்ள 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : ரசகுல்லாவால் வந்த ரகளை…திருமணத்தில் மணமகன்-மணமகள் குடும்பத்தினர் களேபரம்!
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 பேர்
இரண்டு கார்கள் மோதிக்கொண்டு கடும் விபத்துக்குள்ளான நிலையில், அது குறித்து அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 7 பேரை மீட்ட போலீசார், அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க : தமிழகத்தில் மிதமான மழை தான் இருக்கும்.. சென்னைக்கு இனி நோ மழை – பிரதீப் ஜான் தகவல்
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை
பின்னர் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரத்தில் நடைபெற்ற இந்த கோர சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.