Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் மிதமான மழை தான் இருக்கும்.. சென்னைக்கு இனி நோ மழை – பிரதீப் ஜான் தகவல்..

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு சில இடங்களில் மட்டுமே மிதமான மழை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், “அடுத்த ஆறு நாட்களுக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சென்டிமீட்டருக்கு குறைவான மழை தான் பதிவாகும்" என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் மிதமான மழை தான் இருக்கும்.. சென்னைக்கு இனி நோ மழை – பிரதீப் ஜான் தகவல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Dec 2025 06:15 AM IST

வானிலை நிலவரம், டிசம்பர் 6, 2025: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 6, 2025 தேதியான இன்று, தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும். அதே சமயத்தில், டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 15ஆம் தேதி வரை அல்லது அடுத்த ஒரு வார காலத்திற்கு சில இடங்களில் மிதமான மழை மட்டுமே பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டிட்வா புயலால் ஸ்தம்பித்த தமிழகம்:

தமிழகத்தில் கடந்த வாரத்தை எடுத்துக்கொண்டால், ‘டிட்வா’ புயலின் காரணமாக தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பதிவானது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாத மழை பதிவாகி, சில இடங்களில் கிட்டத்தட்ட 25 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பெய்தது.

மேலும் படிக்க: திருச்சி – சென்னை விமான கட்டணம் ரூ.41,000 – இண்டிகோ விமானம் ரத்தால் மளமளவென உயர்வு – பயணிகள் கடும் அவதி

அதே சமயத்தில், ‘டிட்வா’ புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏக்கக்கணக்கான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த மாவட்டங்களில் சுமார் 23 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இனி நோ மழை – பிரதீப் ஜான்:


இந்த சூழலில், தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு சில இடங்களில் மட்டுமே மிதமான மழை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், “அடுத்த ஆறு நாட்களுக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சென்டிமீட்டருக்கு குறைவான மழை தான் பதிவாகும்.

மேலும் படிக்க: சர்வே கல் மீது தீபம்? மதக் கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம்… கனிமொழில் பேச்சு

அதே சமயத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்,” என தெரிவித்துள்ளார். மேலும், இன்று முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை இருக்கலாம்; ஏனைய மாவட்டங்கள் முழுவதும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அவர் தெரிவித்தார் என கூறப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில், நேற்று முதலே மழை குறைந்த நிலையில் உள்ளது. பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான அல்லது மிதமான மழை பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.