ஆட்சியாளர்களால் ஜனநாயகத்துக்கு ஆபத்து…. கூடலூரில் மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேச்சு

Rahul Gandhi Address to Students: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளி பொங்கல் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுடன் பொங்கல் கொண்டாடினார். நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, ஜனநாயகத்துக்கு ஆட்சியாளர்களால் ஆபத்து என்று பேசினார்.

ஆட்சியாளர்களால் ஜனநாயகத்துக்கு ஆபத்து.... கூடலூரில் மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேச்சு

ராகுல் காந்தி

Published: 

13 Jan 2026 19:17 PM

 IST

நீலகிரி, ஜனவரி 13 : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபடித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு தேசிய அளவிலான தலைவர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வருகை தருகின்றனர். இந்த சூழலில், வரும் ஜனவரி 23, 2026 அன்று பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தமிழ்நாட்டுக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். அப்போது மழை குறுக்கிட்ட நிலையில் பொருட்படுத்தாது மாணவர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, இந்த தொழில்நுட்ப யுகத்தில் அனைவரும் அதிக தகவல்களை சேகரிக்கவே முயற்சிக்கிறார்கள். ஆனால் அதில் நாம் உண்மையான அறிவை பெற தவறிவிடுகிறோம். போட்டி நிறைந்த இன்றைய உலகில் குழந்தைகள் தகவல்களை மட்டும் அடிப்படையாக கொண்டு செயல்படாமல், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக வளர வேண்டும் என்றும், அறிவும் ஞானமும் பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.

இதையும் படிக்க : திமுக-காவல்துறை தொடர்பாக சிபிஐ-யிடம் ஆதாரத்துடன் புகார்…பரபரப்பை கிளப்பிய சி.டி.ஆர். நிர்மல் குமார்!

ஆசிரியரை பாராட்டிய ராகுல் காந்தி

மேலும் பேசிய அவர், பள்ளிக்குள் நுழைந்தபோது மாணவர்களிடம் பேசினேன். மாணவர்களிடம் இங்கு நல்ல ஆசிரியர் யார்?” என்று கேட்டேன். அதற்கு மாணவர்கள் ஆலிஸ் என சொன்னார்கள். ஏன் என கேட்டபோது, அவர் அன்பாக இருப்பவர், கருணையுடன் நடந்து கொள்வவர், நாங்கள் சொல்லும் விஷயங்களை கவனமாக கேட்பவர் என்று மாணவர்கள் தெரிவித்தனர். அந்த ஆசிரியருக்கு பாராட்டுகள் என்றார்.

மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி

 

இதையும் படிக்க : ஜன நாயகன் பட தாமதத்துக்கு மத்திய அரசே காரணம்..விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல் காந்தி!

‘ஆட்சியில் இருப்பவர்களால் ஜனநயாகத்துக்கு ஆபத்து’

மேலும் பேசிய அவர், என்னுடைய அரசியல் போராட்டமும் அதுபோல தான். அன்பும் மரியாதையும் நிறைந்த இந்தியாவை உருவாக்குவதே என் இலக்கு. மக்கள் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும், பிற மதங்களையும் கலாச்சாரங்களையும் மதிக்க வேண்டும், பிறரின் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் ஜனநாயகத்துக்கு வெளியில் இருந்து வரும் ஆபத்தை விட, ஆட்சியில் இருப்பவர்களாலேயே அதிக அச்சுறுத்தல் உருவாகிறது என்றார்.

மக்களின் துயரத்தை துடைக்கும் போன் பூத்
வெனிசுலா அதிபரை பிடிக்க அமெரிக்க வீரர்கள் சென்ற காட்சி.. AI வீடியோ..
ரஷ்யக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா.. ரஷ்யா கடும் எதிர்ப்பு!
ஒரு கைக்குட்டையின் விலை ரூ.7 லட்சம் என்றால் நம்புவீர்களா? வேறெங்கும் இல்லை, இந்தியாவில் தான்..