போலி மருந்து விவகாரம்…தமிழகத்தில் 34 மருந்தகளை ஆய்வு செய்ய உத்தரவு!
3 4 Medicine Inspect In Tamil Nadu: தமிழகத்தில் 34 வகையான போலி மருந்துகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவால் பல தரப்பட்ட மக்கள் பீதியில் ஆழந்துள்ளனர் .

34 மருந்துகள் சோதனை செய்ய உத்தரவு
மத்திய பிரதேசத்தில் கோல்ட்ஃரிப் இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த மருந்து தயாரிப்பு நிறுவனமானது காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நிலையில், அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை இயங்கி வந்தது தெரிய வந்துள்ளது. இது மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இருவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார்
இதுகுறித்த புகாரின் அடிப்படையில், புதுச்சேரி சி பி சி ஐ டி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்ததில் மதுரையை சேர்ந்த ராஜா என்பவர் புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் தங்கி இருந்து காரைக்குடியை சேர்ந்த ஏ.கே. ராணா, மெய்யப்பன் ஆகியோரின் பெயரில் போலியாக தொழிற்சாலை உரிமத்தை பெற்று புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கடந்த 5 ஆண்டுகளாக போலி மருந்து மற்றும் மாத்திரைகள் தயாரித்து வந்தது தெரிய வந்தது.
அனைத்து மாநில சுகாதார துறைக்கு கடிதம்
இதைத் தொடர்ந்து, போலியாக உரிமம் தயாரித்து கொடுத்த ராணா, மெய்யப்பன் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை அனைத்து மாநில சுகாதாரத் துறைக்கும் கடிதம் ஒன்று எழுதி உள்ளது. அதில், குறிப்பிட்ட பேட்ச் வகையில் இருக்கக் கூடிய மருந்து, மாத்திரைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம்…உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
34 வகையான மருந்துகளை ஆய்வு செய்ய வேண்டும்
அதன்படி, போலியான 34 மருந்து வகைகள் எந்தெந்த மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுகிறது எனவும், அந்த மருந்துகளை உடனடியாக பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த போலியான தொழிற்சாலையில் உற்பத்தி செய்த மருந்துகள் வேறு ஏதேனும் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பான ஆய்வை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.
அன்றாடம் பயன்படுத்தக் கூடிய மருந்துகள்
இந்த 34 மருந்துகளில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பயன்படுத்தும் பெரும்பாலான மருந்துகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில், குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மெட்பார்மின், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிக்கு பயன்படுத்தக்கூடிய மாத்திரைகள், ரத்த கொழுப்பை கட்டுப்படுத்தக்கூடிய மாத்திரைகள் என அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மருந்து, மாத்திரைகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த மருந்து மற்றும் மாத்திரைகள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: எஸ்ஐஆர் பணியில் மிகப்பெரிய குளறுபடி…நாதக வேட்பாளர் இறந்ததாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!