Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Pro Wrestling League 2026 : ஒலிம்பிக் தரத்திலான ரெஸ்ட்லிங் போட்டிகள் – எதில் பார்க்கலாம்?

, புரோ ரெஸ்லிங் லீக் 2026, இந்திய மல்யுத்தத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. வீரர்களுக்கான தொழில்முறை வளர்ச்சி, ரசிகர்களுக்கான உயர்தர விளையாட்டு அனுபவம் மற்றும் இந்திய விளையாட்டு சூழலுக்கு ஒரு புதிய ஊக்கமாக PWL தொடரும் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Pro Wrestling League 2026 : ஒலிம்பிக் தரத்திலான ரெஸ்ட்லிங் போட்டிகள் – எதில் பார்க்கலாம்?
இந்தியாவின் புரோ ரெஸ்ட்லிங் லீக்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Jan 2026 21:48 PM IST

இந்தியாவில் ஒலிம்பிக் போன்று மல்யுத்தத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்குடன் உருவாக்கப்பட்ட புரோ ரெஸ்ட்லிங் லீக் ( Pro Wrestling League), தற்போது ஐபிஎல் போன்று நாட்டின் முன்னணி தொழில்முறை மல்யுத்த போட்டியாக வளர்ந்து வருகிறது. மல்யுத்த வீரர்களை மையமாகக் கொண்ட, நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்யும் ஒரு வலுவான சூழலை உருவாக்குவதே இந்த லீகின் முக்கிய இலக்காகும். புரோ ரெஸ்லிங் லீக், இந்தியாவின் சிறந்த மல்யுத்த வீரர்களுடன் உலகின் முன்னணி சர்வதேச வீரர்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைக்கிறது. தொழில்முறை, அணிகள் அடிப்படையிலான இந்த போட்டிகள், வீரர்களுக்கு தொடர்ச்சியான போட்டி அனுபவம், தேசிய அளவிலான கவனம் மற்றும் நிலையான தொழில்முறை வாழ்க்கை பாதையை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாரம்பரிய அகாடா முறையில் இருந்து உருவாகும் இளம் வீரர்கள், உயர்தர போட்டிகளுக்குள் நுழைய இந்த லீக் ஒரு முக்கிய பாலமாக செயல்படுகிறது. புரோ ரெஸ்ட்லிங் லீக் முக்கிய நோக்கங்களில், மல்யுத்த வீரர்களுக்கான கட்டமைக்கப்பட்ட தொழில்முறை போட்டிகள், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வெளிப்பாடு, வளர்ச்சி பாதைகளை வலுப்படுத்துதல் மற்றும் மல்யுத்தத்தை இந்தியாவில் ஒரு முக்கிய விளையாட்டாக உயர்த்துதல் ஆகியவை அடங்கும். இதன் மூலம், மல்யுத்தம் ஒரு பாரம்பரிய விளையாட்டாக மட்டுமல்லாமல், நவீன விளையாட்டு ரசிகர்களை கவரும் பிரதான விளையாட்டாக மாற்றப்பட வேண்டும் என்பதே லீகின் நீண்டகால நோக்கமாகும்.

புரோ ரெஸ்ட்லிங் போட்டிகளை எதில் பார்க்கலாம்?

இந்த நிலையில், PWL 2026 போட்டிகள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் நாடு முழுவதும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளன. குறிப்பாக, சோனி லிவ் மற்றும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களால் சோனி டென் 4, சோனி டென் 5 சேனல்கள் மூலம் ரசிகர்கள் இந்த போட்டிகளை நேரடியாகக் காண முடியும்.

புரோ ரெஸ்ட்லிங் லீக் போட்டியின் பாயிண்ட்ஸ் டேபிள்

 

 

View this post on Instagram

 

A post shared by Pro Wrestling League (@pwl.india)

புரோ ரெஸ்லிங் லீக் தலைவர் தயான் ஃபரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மல்யுத்த வீரர்களுக்கு ஒரு நிலையான, தொழில்முறை மேடையை வழங்குவதே புரோ ரெஸ்ட்லிங் லீக் முக்கிய நோக்கம். இளம் வீரர்கள் முதல் அனுபவமிக்க வீரர்கள் வரை அனைவருக்கும் சம வாய்ப்பை உருவாக்கி, இந்திய மல்யுத்தத்தை உலக தரத்திற்கு உயர்த்த விரும்புகிறோம்  என தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், புரோ ரெஸ்லிங் லீக் 2026, இந்திய மல்யுத்தத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. வீரர்களுக்கான தொழில்முறை வளர்ச்சி, ரசிகர்களுக்கான உயர்தர விளையாட்டு அனுபவம் மற்றும் இந்திய விளையாட்டு சூழலுக்கு ஒரு புதிய ஊக்கமாக PWL தொடரும் என விளையாட்டு உலகம் எதிர்பார்க்கிறது.