அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.2,000லிருந்து, ரூ.3,000ஆகவும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். குறிப்பாக பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ரூ.50,000ல் இருந்து ரூ. 1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை, ஜனவரி 24: தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு அளித்த பதிலுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையில், 2026ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து, 3 நாட்கள் சட்டப்பேரவை நடந்த நிலையில், இன்று ஆளுநர் உரைக்கு பதிலளித்து வரும் முதல்வர் ஸ்டாலின், பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? இன்றும் நாளையும் நடக்கும் சிறப்பு முகாம்..
ஓய்வூதியம் உயர்த்தி அறிவிப்பு:
இதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 24) முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். குறிப்பாக, ஓய்வூதியம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதன்படி, அங்கன்வாடி பணியார்களுக்கு ஓய்வூதியம் ரூ.3,400ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதாவது, தற்போது அவர்கள் மாதம் ரூ.2,000 பெற்று வந்தனர். அதிலிருந்து, ரூ.1,400 ஊயர்த்தி, இனி மாதம் ரூ.3,400ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.




பணி நிறைவுத்தொகை உயர்வு:
இதன் மூலம், அவர்களது நீண்ட நாள் கோரிக்கை ஒன்று நிறைவேறியுள்ளது. மேலும், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.2,000ல் இருந்து, ரூ. 3,200 ஆகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.2,000லிருந்து, ரூ.3,000ஆகவும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். குறிப்பாக பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ரூ.50,000ல் இருந்து ரூ. 1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
குடும்ப ஓய்வூதியம் ரூ.1,200, ரூ.1,100:
சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.1,200ம், மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக ரூ.1 ,100ம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : அதிமுக – பாஜக கூட்டணி.. பாமக, அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை?
அதோடு, சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டல், இறந்த பணியாளர்களின் இறுதி சடங்குகளுக்கு ரூ.20,000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.