மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்து – 20க்கும் மேற்பட்டோர் காயம்
Government Bus Accident : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர், டிசம்பர் 7: திருவாரூர் (Thiruvarur) மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக அரசு பேருந்துகள் (Government Bus) அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சமீபத்தில், தென்காசி மற்றும் சிவகங்கையில் பேருந்து விபத்துகளில் பலர் பலியாகினர். இதனையடுத்து அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என் கோரிக்கைள் எழுந்துள்ளன.
பேருந்து விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூரில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கும் ஆம்புலன்ஸிற்கும் தகவல் அறிந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சிலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிக்க : டியூஷனுக்கு சென்ற 8 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்.. அதிர்ச்சி சம்பவம்!




இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். சமீப காலமாக அடிக்கடி பேருந்து விபத்துகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து விபத்துக்களுக்கான காரணங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் வழியாக காரைக்குடிக்கு மற்றொரு அரசு பேருந்தும், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதையும் படிக்க : முன்பகை காரணமாக கட்டையால் தாக்கிய மாணவர்கள் – பிளஸ் 2 மாணவர் பரிதாப மரணம் – அதிர்ச்சி தகவல்
தொடரும் பேருந்து விபத்துகள்
மேலும் இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக மேல் சிகிச்சைக்காக 10 பேர் மதுரை மற்றும் சிவகங்கை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் தென்காசி அருகே துரைசாமிபுரத்துக்கு அருகே, கடந்த நவம்பர் 24, 2025 அன்று இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.