இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி.. பயணத்திட்டம் என்ன?
PM Modi Tamil Nadu Visit: 2025 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வருகை தருகிறார் குறிப்பாக அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெறும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி, ஜூலை 19, 2025: பிரதமர் நரேந்திர மோடி 2025 ஜூலை 27ஆம் தேதி தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தர உள்ளார். சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கக்கூடிய நிலையில் பிரதமர் மோடியின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். குறிப்பாக 2025 ஜூலை 27ஆம் தேதி நடைபெறும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதேபோல் இந்த விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் மோடி அரியலூர் பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக 2025 ஜூலை 26 ஆம் தேதி கேரளாவில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெருங்கும் தேர்தல்.. தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி:
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பாஜக கட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பாஜக தரப்பில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர், பூத் ஏஜெண்டுகள் அமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முக்கியமாக வருகின்ற 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி நெல்லையில் மாநாடு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இந்தியா கூட்டணிக்கு குட்பை.. அதிர்ச்சி கொடுத்த ஆம் ஆத்மி.. அரசியலில் பரபரப்பு!
2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக நான்கு இடங்களை வென்ற நிலையில் இந்த முறை அதிக இடங்கள் கைப்பற்ற வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு மாவட்டங்களில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2026 ஜனவரி வரையில் மாநிலம் தோறும் சென்று மாநாடு நடத்தப்பட உள்ளது. குறிப்பாக மதுரை, கோவை, சேலம், தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மாநாடு நடத்தப்படுகிறது.
ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி:
தேர்தல் பணிகள் ஆயத்தமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாஜக தரப்பில் நடத்தப்படும் மாநாடு பிரதமர் மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வருகை தருகிறார். குறிப்பாக அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெறும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.
மேலும் படிக்க: நிமிஷா பிரியா வழக்கு.. அரசாங்க – மத்தியஸ்தக் குழுவை நியமிக்கக் கோரி மனு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..
இதனை தொடர்ந்து அரியலூரில் நடைபெறும் விழாவில் பங்கேற்று விட்டு தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை 28ஆம் தேதி தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்