ரூ.3000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு… ரேஷன் கடைகளில் இன்று விநியோகம் தொடக்கம்..
Pongal gift package Distribution begins today: கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணைந்து, பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடித்துவிட்டன. மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி மற்றும் சர்க்கரை 100% வழங்கப்பட்டது.

பொங்கல் பரிசு விநியோகம்
சென்னை, ஜனவரி 08: தமிழகம் முழுவதும் இன்று முதல் ரூ.3000 பணத்துடன் பொங்கல் பரிசுப் பொருட்கள் மக்களுக்கு வநியோகிக்கப்பட உள்ளது. இதற்காக ரேஷன் கடைகளில் தேவையான பச்சரிசி மற்றும் சர்க்கரை முழுமையாக கையிருப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழர் மரபில் சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு ரேஷன் அட்டையுடைய 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 குடும்பங்களுக்கு, இலங்கை தமிழர் குடும்பங்களையும் சேர்த்து, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் தலா ரூ.3,000 ரொக்கமாக வழங்குகிறது. இந்த பொங்கல் நலத்திட்ட விநியோகத்தை, சென்னை ஆலந்தூர் – நசரத் புரம் ரேஷன் கடையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழன்) முறையாக தொடங்கி வைக்கிறார்.
மேலும் படிக்க: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 + 1 தொகுதிகள் ஒதுக்கீடு? வெளியான தகவல்!!
விநியோகத்திற்கு தயாரான பொருட்கள்:
கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணைந்து, பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடித்துவிட்டன. மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி மற்றும் சர்க்கரை 100% வழங்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட வேட்டி-சேலைகள் 80% மக்களால் நுகர்வு செய்யப்பட்டன. இதனால், பயன்படுத்தப்படாத பொருட்களின் அளவை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் நுகர்வு செய்யப்பட்டு, ரேஷன் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பொருட்கள் குடோன்களில் இருப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன; தேவைக்கேற்ப உடனடியாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
கரும்பு வழங்கல் முறை:
ஒவ்வொரு கடைக்கும் 50–80% கரும்புகள் அனுப்பப்பட்டுள்ளன. கரும்பை பசுமையாகவே வழங்க வேண்டும் என்ற நோக்கில் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாக குழுக்கள் மீதமுள்ள அளவை அனுப்புகின்றன. ஒரே வளாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கடைகள் இருந்தால் போலீஸ் பணி ஏற்பாடு செய்யப்படும். ரூ.3,000 ரொக்கத் தொகை, பயனாளிகள் முன்பு எண்ணி வெளிப்படையாக வழங்க வேண்டும். பொங்கல் திருநாள் வரை ரேஷன் ஊழியர்களுக்கு விடுப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி-யை இணைக்க ஆலோசனை? இபிஎஸ் டெல்லி பயணம்..
6 மணிக்கே விநியோகம் தொடக்கம்:
மலைவாழ் பகுதி மக்கள் அதிகாலையிலேயே வேலைக்கு கிளம்புவதால், மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள ரேஷன் கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்படும் என்றும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்காளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.