கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு
Karur TVK Rally Stampede : கரூர் 2025 செப்டம்பர் 27ஆம் தேதியான நேற்று நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000மும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
கரூர், செப்டம்பர் 28 : கரூர் மாவட்டத்தில் 2025 செப்டம்பர் 27ஆம் தேதியான நேற்று நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000மும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஏற்கனவே, நேற்று (செப்டம்பர் 28) இரங்கல் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது, அவர் நிதியுதவி அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு என்ற பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இதுவரை 4 மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டிருந்த அவர், 2025 செப்டம்பர் 27ஆம் தேதியான நாமக்கல், கரூரில் பரப்புரை செய்தார். அப்போது, நாமக்கல்லை முடித்துவிட்டு, கரூருக்கு தனது பரப்புரை வாகனத்தில் சென்றிருக்கிறார். கரூரில் வேலுச்சாமிபுரம் 100 அடி சாலையில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.
இந்த பரப்புரை மாலை 5 மணிக்கு நடைபெற இருந்த நிலையில், தொண்டர்கள் கூட்டத்தால் தள்ளிப்போனது. இரவு 7 மணிக்கு கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தொண்டர்களின் கூட்டம் அலைமோதியது. கிட்டதட்ட 25,000 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர். இதனால், தொண்டர்கள், ரசிர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது மயக்க பலரும் மயக்கமடைந்துள்ளனர். உடனடியாக அடுத்தடுத்து மயக்க மடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Also Read : கரூர் கொடூரம்.. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி.. தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு
தமிழ்நாட்டின் கரூரில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000மும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் @narendramodi அறிவித்துள்ளார். https://t.co/0soo3NL0B9
— PMO India (@PMOIndia) September 28, 2025
இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. அதோடு, அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தும், நிவாரணம் அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி கரூரில் பரப்புரை கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50,000மும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
Also Read : கரூர் துயரம்.. முதல்வர் ஸ்டாலினின் 2 நாட்கள் நிகழ்ச்சிகள் ரத்து!
முன்னதாக இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார். அதோடு, தமிழக அரசு சார்பில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், தவெக சார்பில் உயிரிந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.