துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன்.. அன்புமணி ராமதாஸ் ஆதரவு..
Anbumani Support To C.P Radhakrishnan: இந்திய துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும், குடியரசு துணைத் தலைவர் பதிவுக்கு அவர் சரியான தேர்வு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஆகஸ்ட் 18, 2025: இந்தியாவில் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரக்கூடிய 2025 செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 17 2025 தேதியான நேற்று பாஜக தர[ப்பில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் போட்டிக்கு சி.பி ராதாகிருஷ்ணன் சரியான தேர்வு என்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் உடல்நிலை காரணம் காட்டி ராஜினாமா செய்தார்.
ஆதரவு தர கோரிக்கை:
சி.பி ராதாகிருஷ்ணன் கோவையில் இரண்டு முறை எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் வாஜ்பாய் மற்றும் எல்.கே அத்வானி ஆகியோரின் கீழ் பணியாற்றிய பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவர். இவர் 1970களில் இருந்து ஆர் எஸ் எஸ் அமைப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சி.பி ராதாகிருஷ்ணனுக்கு எதிராக இந்தியக் கூட்டணி? முதல்வர் ஸ்டாலினிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..
இந்த நிலையில் குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத்சிங் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் தொடர்ச்சியாக பேசி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தரவேண்டும் என கோரிக்கை முன்பைத்துள்ளார்.
மேலும் படிக்க: ராமதாஸின் பொதுக்குழு.. அன்புமணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
இந்த நிலையில் மாணிக்கம் தாக்கூர் எம்.பி., “ அவர் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தை சேர்ந்தவர் என்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் ராதாகிருஷ்ணனை ஆதரிப்பது தொடர்பாக முடிவெடுப்பார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார். இது போன்ற சூழலில் ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சி.பி இராதாகிருஷ்ணனுக்கு தனது ஆதரவை தெரிவித்து இருந்த நிலையில் தற்போது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அன்புமணி ஆதரவு:
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போட்டிக்கு சி.பி. இராதாகிருஷ்ணன்
சரியான தேர்வு – வாழ்த்துகள்! pic.twitter.com/8jNFw82Vdg— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 18, 2025
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்திய குடியரசு துணை தலைவர் பதவிக்கு செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்தவரும் மராட்டிய மாநில ஆளுநருமான சி.பி இராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்.
குடியரசு துணைத் தலைவர் என்ற முறையில் மாநிலங்களவையை வழிநடத்தி செல்வதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உண்டு. அனைத்து கட்சியினரையும் அரவணைத்து செல்லும் திறன் அவருக்கு உண்டு இந்தியாவின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு பெருமை சேர்க்கும் வகையில் சி.பி ராதாகிருஷ்ணன் செயல்படுவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்