ஏசி மின்சார ரயிலில் போறீங்களா? தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

Chennai One APP : சென்னையில் மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வகையில், சென்னை ஒன் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், சென்னை ஒன் ஆப்பில் ஏசி மின்சார ரயிலில் பயணிப்பவர்கள் டிக்கெட் பெற முடியாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஏசி மின்சார ரயிலில் போறீங்களா? தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

சென்னை ஒன் ஆப்

Updated On: 

25 Sep 2025 10:40 AM

 IST

சென்னை, செப்டம்பர் 25 :  சென்னை ஒன் செயலியில் ஏசி மின்சார ரயில் டிக்கெட்டுகளை பயணிகள் எடுக்க முடியாது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னை ஒன் ஆப்பில் சாதாரண மின்சார ரயில்களில் மட்டுமே டிக்கெட் புக் செய்து பயணிக்க முடியும். சென்னையில் பொது போக்குவரத்து தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது போக்குவரத்தை பள்ளி, கல்லூரிகள், வேலைக்கு செல்பவர்கள் என  பலரும்  பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான மக்கள் தனித்தனியாகவே டிக்கெட் எடுத்து வருகின்றனர். இதனால், பயணிகளால் செல்லும் இடத்திற்கு சரியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனால், பயணிகளின் சிரமத்தை போக்க சென்னை ஒன் செயலி அறிமுகப்படுததப்பட்டது. சென்னை ஒன் செயலி மூலம்  பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்து கொள்ள முடியும். ஒரே டிக்கெட்டில் மூன்று போக்குவரத்திலும் பயணிக்கும் வகையில் கும்டா எனும் போக்குவரத்து குழுமம், தனியார் நிறுவனம் மூலம் இதற்காக புதிய செயலி தயாரித்து, இதன் அடிப்படையில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சென்னை ஒன் செயலில் 2025 செப்டம்பர் 22ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

Also Read : வரதட்சணை கொடுமை புகார்.. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் மெட்ரோ, பேருந்து, மின்சார ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணம் மேற்கொள்ளலாம். சென்னை ஒன் செயலி மூலம் செல்லும் இடத்தில் குறிப்பிட்டால், எந்தந்த போக்குவரத்தில் செல்லலாம் என்பது குறித்த விவரம் அறிவிக்கப்படும். அதன்படி அடிப்படையில், உங்களுக்கான போக்குவரத்தை தேர்வு செய்து, டிக்கெட்டு புக் செய்ய வேண்டும். இதற்காக கட்டணத்தை யுபிஐ மூலம் செலுத்த வேண்டும். இதில் ஆட்டோவில் சென்றால் ஆட்டோ ஒட்டுநரிடம் தனியாக செலுத்த வேண்டி இருக்கும்.  இந்த நிலையில், தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

அதாவது, சென்னை ஏசி மின்சார ரயில் டிக்கெட்டுகளை சென்னை ஒன் ஆப்பில் பெற முடியாது என தெற்கு ரயில்வே  தெரிவித்துள்ளது.  பயணிகளால் சென்னை ஒன் ஆப்பில் ஏசி டிக்கெட்டுகளை புக் செய்ய முடியவில்லை என புகார் அளித்தனர். இதற்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

Also Read : சபரிமலைக்கு போறீங்களா? வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்.. உடனே புக் பண்ணுங்க!

அதாவது, சென்னை ஒன் ஆப் செயலில் மின்சார ரயிலில் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம். ஆனால் ஏசி மின்சார ரயிலில் டிக்கெட் எடுக்க முடியாது. டிக்கெட் பரிசோதனையின்போது, பயணிகள் அசல் ரயில் டிக்கெட்டைக் கார்டு பக்கத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை காண்பிக்க வேண்டும். டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது. இந்த டிக்கெட்டுகளை எடுத்த அடுத்த 3 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.