AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய உதவி ஆய்வாளர் நிரந்தர பணி நீக்கம்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

Palani Sub-Inspector Dismissed: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை அளித்த உதவி ஆய்வாளர் ராஜகோபால் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துறை ரீதியான விசாரணையில் குற்றம் உறுதியானதை அடுத்து தென்மண்டல ஐஜி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய உதவி ஆய்வாளர் நிரந்தர பணி நீக்கம்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!
2
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 18 Nov 2026 13:25 PM IST

திண்டுக்கல், நவ.18: பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணிக்காக்கவும், சட்டத்தை நிலைநாட்டவும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய காவல்துறை அதிகாரிகளே இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் (Sub-Inspector) பணியாற்றி வந்த ராஜகோபால் என்பவர், காவல் நிலையத்திற்குப் பாதுகாப்புத் தேடி வந்த பெண்ணிடமே முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிரச் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, தற்போது அந்த உதவி ஆய்வாளர் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: “எங்களுக்கு போராட இனி தெம்பில்லை!”.. விரக்தியில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலைப் பெற சம்மதித்த குடும்பம்!

தொடர்ச்சியாகத் தொல்லை அளித்த SI ராஜகோபால்:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பழனி தாலுகா காவல் நிலையத்திற்குத் தங்களது குடும்ப நிலப் பிரச்சனை தொடர்பான புகார் ஒன்றைக் அளிப்பதற்காக ஒரு குடும்பத்தினர் வந்துள்ளனர். அப்போது அங்குப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ராஜகோபால், அந்தப் புகாரை விசாரிப்பது போல் நடித்து, புகாரளிக்க வந்த பெண்ணின் செல்போன் எண்ணைப் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் எண்ணிற்குத் தொடர்ச்சியாகத் தகாத குறுஞ்செய்திகளை அனுப்புவது மற்றும் பாலியல் ரீதியான தொந்தரவுகளைக் கொடுப்பது போன்ற அநாகரிகச் செயல்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். காவல்துறை அதிகாரியின் இந்த மிரட்டல் செயலால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், தனது குடும்பத்தினருடன் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.

நடத்தப்பட்ட தீவிரத் துறை ரீதியான விசாரணை:

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்ட காவல் துறை உயர் அதிகாரிகள், உடனடியாக முதற்கட்ட நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் ராஜகோபாலைத் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து, அவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்துத் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை குழு மூலமாகச் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில், உதவி ஆய்வாளர் ராஜகோபால் அந்தப் பெண்ணிற்குத் தொலைபேசி மூலமாகப் பாலியல் தொல்லை அளித்தது நூற்றுக்கு நூறு உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிக்க: “நள்ளிரவில் வீடு புகுந்த கொடிய விஷப்பாம்பு!”.. தாயுடன் தூங்கிய 2 பிஞ்சுக் குழந்தைகள் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்..

ஐஜி பிறப்பித்த நிரந்தரப் பணி நீக்க உத்தரவு:

துறை ரீதியான விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் ராஜகோபாலைத் தற்காலிக நீக்கத்திலிருந்து மாற்றி, நிரந்தரமாகப் பணியிலிருந்து நீக்கி மதுரை தென்மண்டல ஐஜி அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். காவல் நிலையத்திற்கு நம்பிக்கையோடு நீதி கேட்டு வரும் பொதுமக்களுக்கே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிய இதுபோன்ற காவலர்களின் செயல்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us